The Economist Intelligence Unit (EIU) 2023ம் ஆண்டுக்கான most liveable cities index-தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டைப்போலவே இம்முறையும் முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னாவும், இரண்டாம் இடத்தை டென்மார்க்கின் Copenhagen-உம் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பல இடங்கள் முன்னேறிய மெல்பன் நகரம் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தையும், சிட்னி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
கடுமையான மற்றும் நீடித்த கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மெல்பன் பத்தாவது இடத்திலும் சிட்னி 13வது இடத்திலும் இருந்தது.
கனடாவின் மூன்று நகரங்கள், சுவிட்சர்லாந்தின் இரண்டு நகரங்கள் Osaka மற்றும் Auckland ஆகியவை முதல் பத்து இடங்களில் உள்ளன.
173 நகரங்களை மதிப்பாய்வு செய்த The Economist Intelligence Unit நிலையானதன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற காரணிகளை மதிப்பீடு செய்தது.

A graph depicting the top 10 most liveable cities globally in 2023, according to a survey by the Economist Intelligence Unit. Source: SBS
பிரிஸ்பேன் 27வது இடத்திலிருந்து முன்னேறி 16வது இடத்தைப் பிடித்தது.
உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, அதன் பின்னர் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலகில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அல்லது மோசமான நகரமாக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தவிர நைஜீரியாவின் லாகோஸ், லிபியாவின் திரிப்போலி, பங்களாதேஷின் டாக்கா, பப்புவா நியூகினியின் போர்ட் மோஸ்பி ஆகிய நகரங்களும் இத்தரப்படுத்தலில் கடைசி 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

Credit: Economist Intelligence Unit.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.