நாட்டில் எத்தனை பேர் bridging வீசாவுடன் தற்போது வாழ்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் bridging வீசாவுடன் இங்கு வாழ்வதாக இந்த வருடம் மார்ச் மாதம் பெறப்பட்ட தரவுகள் சொல்கின்றன. நம் நாட்டின் வரலாற்றிலேயே, இப்படியான வீசாவில் வாழ்பவர்கள் தொகையின் உச்ச எண்ணிக்கை அது.
இந்த நாட்டில் சட்ட பூர்வமாகத் தங்கி இருக்க ஒருவருக்குக் குடியுரிமை இருக்க வேண்டும், அல்லது செல்லுபடியாகும் வீசா வைத்திருக்க வேண்டும். வீசா பெற வேண்டி விண்ணப்பித்து விட்டுக் காத்திருப்பவர்களின் பழைய வீசா காலாவதியாகும் போது bridging visa என்ற இடைக்கால வீசா வழங்கப்படுகிறது.
பொதுவாக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வீசாவிலுள்ள நிபந்தனைகள் புதிதாக வழங்கப்படும் bridging வீசாவிற்கும் பொருந்தும்.

The Australian migration zone is a legal device created by the Australian government for the purpose of Australia's visa policy and immigration policy. Source: Pexels/Pixabay
Bridging visa B வைத்திருப்பவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் வேளை, ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் நாட்டிற்கு வெளியே செல்லவும், திரும்பி வரவும் அனுமதி வழங்கப்படுகிறது.
Bridging visa A வைத்திருப்பவர்கள் அல்லது ஏற்கனவே Bridging Visa B வைத்திருக்கும் ஒருவர் தான் இந்த BVB என்று சுருக்கமாக அழைக்கப்படும் Bridging Visa Bற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பல்வேறு வகையான Bridging Visa இருக்கின்றன என்றும் ஒவ்வொன்றும் வெவ்வேறு உரிமைகளை ஒருவருக்கு வழங்குகின்றன.
செல்லுபடியாகும் வீசா வைத்திருக்கும் ஒருவர் நாட்டில் இருந்து கொண்டே வேறொரு வீசாவிற்கு விண்ணப்பித்தால் அவருக்கு Bridging Visa C வழங்கப்படுகிறது.
பொதுவாக Bridging Visa C வைத்திருப்பவர்கள் இங்கே வேலை செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

Only people on a BVA or a BVB can apply for a BVB. Source: Getty Images/Issarawat Tattong
நாட்டை விட்டு வெளியேற வேண்டிய ஒருவர் – அவரது வீசா காலாவதியாகி இருக்கலாம், அல்லது அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கலாம், அப்படியானவர்களுக்கு Bridging Visa E வழங்கப்படுகிறது.
Bridging Visa வழங்கப்படுபவர்கள் பொதுவாக இங்கே வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருந்தாலும், நிலமையைப் பொறுத்து, வேலை செய்வதற்கு அனுமதி கோரலாம்.
இந்த Bridging Visaக்கள் எவ்வளவு காலம் செல்லுபடியாகும் என்பது ஒவ்வொருவரின் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தது.
இவை தவிர மேலும் சில Bridging Visa வகைகள் உள்ளன.

Usually a BVE, like a BVC, does not come with work rights. Source: Burst/Pexels

If you hold a BVC you cannot travel abroad under any circumstances. Source: Alexandr Podvalny/Pexels
ஒருவர் நிரந்தர வீசா பெற விண்ணப்பிக்க முயன்ற போது, அந்த விண்ணப்பம் சரியான முறையில் தாக்கல் செய்யப்படாது போனால், அல்லது அவரை நேர் காண்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு Bridging Visa D வழங்கப்படலாம். பொதுவாக இது மிகக் குறைந்த காலத்திற்கு வழங்கப்படுகிறது.
தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு Bridging Visa R வழங்கப்படுகிறது. அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என்றால், அவர்களை சட்ட பூர்வமாக தடுப்புக்காவலில் வைத்திருக்க இந்த Bridging Visa R வழங்கப்படுகிறது.
கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அல்லது வேறு சில குற்றம் புரிந்தவர்கள் நம் நாட்டில் தங்குவதற்கு உரிமை இல்லை என்றால் அவர்களுக்கு Bridging Visa F வழங்கப்படுகிறது. இது மிகவும் அரிதாகவே வழங்கப்படுகிறது என்பது நோக்கத்தக்கது.
சில சந்தர்ப்பங்களில், Bridging Visaவிற்கு நேரடியாக உள்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்க முடியும், ஆனால் சிக்கலான சூழ்நிலைகளில், குறிப்பாக ஒருவர் வைத்திருக்கும் வீசா காலாவதியாகி விட்டால், விரைவில் சட்ட ஆலோசனை பெறுவது நல்லது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.