சிட்னி மற்றும் ஹோபார்ட்டில் ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதியில் வீட்டு மதிப்புகள் இரட்டிப்பாக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் சில சொத்துக்களின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இதேவேளை அடுத்த ஆண்டில், சில நகரங்களில் வீடுகளின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் சொத்து மதிப்பு இரட்டிப்பாக எவ்வளவு காலம் எடுத்தது மற்றும் அடுத்த நிதியாண்டில் விலைகள் எவ்வாறு மாறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
சொத்து மதிப்பு இரட்டிப்பாக்க ஏழு முதல் 10 ஆண்டுகள் தேவை என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் மே 2023 வரை, சராசரியாக வீட்டின் விலை இரட்டிப்பாகுவதற்கு 15.4 ஆண்டுகள் எடுத்ததாக புதிய PropTrack ஆய்வு காட்டுகிறது.
Units-க்கு சுமார் 17.8 ஆண்டுகள் தேவைப்பட்டது.
இந்தப்பின்னணியில் டாஸ்மேனியாவின் தலைநகரில் வீடுகளின் விலை இருமடங்கு அதிகரிக்க வெறும் 6.8 ஆண்டுகள் எடுத்துள்ளன. Units-க்கு 7.8 ஆண்டுகள் எடுத்துள்ளன.
இதேநேரம் சிட்னியில் வீடுகளுக்கு 9.6 ஆண்டுகளும் Units-க்கு 17.3 ஆண்டுகளும் எடுத்துள்ளன.

House prices have doubled fastest in Western Australia's outback north region. Source: SBS
உங்கள் பகுதியில் வீடுகளின் விலை இரட்டிப்பாக எத்தனை வருடங்கள் ஆகியது என்பதை இந்த வரைபடத்தில் காணலாம்.
Domain-இன் 2023-24 நிதியாண்டுக்கான வீட்டு விலை
முன்னறிவிப்பு அறிக்கையின்படி, சிட்னி, அடிலெய்ட் மற்றும் பெர்த்தில் வீடுகளின் விலை புதிய உச்சத்தை எட்டும்.
மேலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமான சிட்னியில் சராசரி வீட்டின் விலை $1.62 மில்லியன் முதல் $1.66 மில்லியன் வரை காணப்படும்.
அதேநேரம் பிரிஸ்பேன், அடிலெய்ட் மற்றும் ஹோபார்ட் ஆகிய நகரங்களில் Unit விலைகள் புதிய சாதனை உச்சத்தை எட்டக்கூடும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.
Regional பகுதிகளில் வீடு மற்றும் Unit விலைகள் வரவிருக்கும் நிதியாண்டில் "சுமாராக" அதிகரிக்கும் என்று அறிக்கை கணித்துள்ளது. அத்துடன் வீடுகளின் விலைகள் Unitsஐ விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகளின் விலைகள் 10 ஆண்டுகளில் மிகவும் மெதுவாக அதிகரித்துள்ள சில இடங்களின் பட்டியல் கீழ்க்காணும் படத்தில் உள்ளது.

Housing prices have doubled slowest in the Mandurah region in Western Australia. Source: SBS
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.