அடுத்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தீராப் பிணியுடன் வாழ்பவர்கள், தாம் தேர்ந்தெடுத்த நேரத்தில் தங்கள் வாழ்க்கையை சட்டப்படி முடித்துக் கொள்ள முடியும்.
குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றத்தின் 93 உறுப்பினர்களில் 61 பேரின் ஆதரவாக வாக்களித்தமையால், Premier Annastacia Palaszczuk அவர்களால் முன் வைக்கப்பட்ட சட்ட முன் வரைவு வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தீராத நோய், அல்லது ஏதாவது பிணியால் தொடர்ந்து அவதைப்படுபவர்கள் கருணைக் கொலை மூலம் தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள இந்த சட்டம் அனுமதிக்கிறது.
ஒருவர் இறப்பதினால் ஏற்படும் துயரத்தை இந்த சட்டம் மாற்றப் போவதில்லை என்று கூறிய துணை Premier Steven Miles, ஆனால் அது அவர்களின் வலியையும் துன்பத்தையும் குறைக்கும் என்றார்.
இந்த சட்ட முன் வரைவிற்கு எதிராக 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மாநில எல்லை மூடப்பட்டிருப்பதால், LNP கட்சியைச் சேர்ந்த Surfers Paradise உறுப்பினர் John-Paul Langbroek வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், palliative care எனப்படும் அந்திம கால பராமரிப்பிற்குத் தேவையான நிதி வழங்காமல் நோயாளிகளது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்படும் என்று, இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் கவலைப்பட்டனர்.
எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் David Janetzki's முன்மொழிந்த 54 திருத்தங்களில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
இந்த சட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும். அதன் பின் கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கிய ஐந்தாவது அதிகார வரம்பாக குயின்ஸ்லாந்து மாறும்.
கருணைக் கொலை ஏற்கனவே விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களில் சட்டமாக்கப் பட்டுள்ளது.
Readers seeking support and information about suicide can contact 24 hours a day online and on 13 11 14. Other services include the on 1300 659 467, and (for people aged five to 25) on 1800 55 1800.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.