Macquarie குழுமத்தின் commodities and markets பொறுப்பதிகாரி Nick O’Kane கடந்த ஆண்டு 57.6 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது வாரமொன்றுக்கு இவரது சம்பளம் 1 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்
இது அவரது சொந்த முதலாளி Shemara Wikramanayake உட்பட ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற நிர்வாகிகள் பெற்றுக்கொண்ட வருவாயை விடவும் அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெற்ற நிர்வாகியாக இருந்த Macquarieயின் CEO Shemara Wikramanayake-ஐ விட Nick O’Kane 25 மில்லியன் டொலர்கள் அதிகம் சம்பாதித்துள்ளார்.
Macquarie குழுமத்தின் ஆண்டு வருமானம் 6.01 பில்லியன் டொலர்கள் என்ற சாதனையை எட்டுவதற்கு, Nick O’Kane பணிபுரியும் commodities and global markets பிரிவு காரணமாக இருந்தமையே இவருக்கான கொடுப்பனவு அதிகரிக்கக் காரணமாகும்
இந்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான Macquarie குழுமத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Macquarie இன் CEO Shemara Wikramanayake, முந்தைய ஆண்டு $25.8 மில்லியனில் இருந்து $32.8 மில்லியனாக ஊதிய உயர்வைப் பெற்றிருந்தார். ஆனால் அவரது நிலையான சம்பளம் $821,081 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.