ஆஸ்திரேலிய நிறுவனங்களில் பணிபுரியும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் (CEO) அதிக சம்பளம் பெறுகின்றவர்களின் பட்டியலில் முதலிடத்திலிருப்பவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்மணி என்று ஆஸ்திரேலியாவின் பத்திரிகை தனது பிரத்தியேக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இலங்கையை பூர்வீகமாகவும் தற்போது சிட்னியில் வசிப்பவருமான Shemara Wikramanayake, Macquarie Group நிறுவனத்தின் CEO ஆவார். இவர் கடந்த ஆண்டு இந்த பதவிக்கு நியிமிக்கப்பட்டவர். இவரது சம்பளம் 18 மில்லியன் டொலர்கள் என்றும் ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள நிறுவனங்களின் CEO சம்பள தரவரிசைப்பட்டியலில் இவரே முதலிடத்தில் உள்ளார் என்றும் Financial Review தெரிவித்துள்ளது.
CEO சம்பள தரவரிசை பட்டியலில் ஒரு பெண் முதலிடத்தை பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என்றும் முதல் ஐம்பது இடங்களிற்குள் நான்கு பெண்கள்தான் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றும் Financial Review மேலும் குறிப்பிட்டுள்ளது.
Shemara Wikramanayake லண்டனிலிருந்து சிட்னிக்கு புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.