தடுப்பூசி போட்டதற்கான டிஜிட்டல் சான்றிதழை எப்படி பெறலாம்?

நீங்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டவுடன், COVID-19 டிஜிட்டல் சான்றிதழை இலகுவாகப் பெற முடியும், அதை எப்பொழுதும் உங்களுடன் கொண்டு செல்ல முடியும்.

People queuing for the COVID-19 vaccine at a vaccine centre.

People queuing for the COVID-19 vaccine at a vaccine centre. Source: Getty Images/James D. Morgan

நீங்கள் COVID-19 தடுப்பூசி போட்டதற்கான தகவல் எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது?

Australian Immunisation Register (AIR) என்ற நோய்த் தடுப்பு பதிவில் நீங்கள் பெற்ற தடுப்பூசிகள் குறித்த தரவுகள் பதிவாகின்றன.  [வேறொரு நாட்டிலிருந்து இங்கு குடி வந்தவர்களுக்கு அந்தப் பதிவில் அனைத்து தடுப்பூசிகளும் சேர்க்கப்படாமல் போகலாம்.]

உங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்போது, அந்தத் தரவுகள் AIR பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படும்.  Medicare இணையப் பக்கத்தில் உங்கள் கணக்கில் ‘நோய்த் தடுப்பு வரலாறு’ என்ற அறிக்கையில் சேர்க்கப்படும்.  பொதுவாக, தடுப்பூசி வழங்குபவர்கள் உங்களுக்குத் தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் உங்கள் விவரங்களைப் பதிவு செய்வார்கள்.
நீங்கள் தடுப்பூசி பெற்ற அனைத்து வரலாறும்....
உங்கள் நோய்த் தடுப்பு வரலாறு Covid-19 தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் நீங்கள் பெற்ற மற்றைய flu காய்ச்சல் தடுப்பூசிகள் குறித்தும் பதிவு செய்கிறது.

14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் சொந்த நோய்த் தடுப்பு வரலாறு அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கும். 
Medicare card
Medicare card Source: AAP Image/Mick Tsikas
தடுப்பூசி போட்டு பத்து நாட்களுக்குப் பின்னரும் உங்கள் பதிவேட்டில் அதற்கான விபரங்கள் தோன்றவில்லை என்றால், உங்களுக்குத் தடுப்பூசி வழங்கியவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.  தேவைப்பட்டால், அவர்கள் AIR உடன் தொடர்பு கொள்வார்கள்.

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு , அந்த தகவலையும் AIR இல் சேர்க்கலாம்.  எப்படி சேர்க்கலாம் என்பதை விளக்கியுள்ளது.

உங்கள் தடுப்பூசி சான்றிதழை பெறுவதற்கான படி முறைகள்

உங்களிடம் myGov கணக்கு இல்லையென்றால், ஒரு myGov கணக்கை முதலில் நீங்கள் உருவாக்க வேண்டும்.

உங்கள் myGov கணக்கை Medicare கணக்குடன் இணைக்க வேண்டும்.

அடுத்து, Express Plus Medicare என்ற செயலியை உங்கள் மொபைல் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதன் மூலம், உங்கள் கைகளில்
இந்தத் தரவுகள் எப்போதும், எங்கு சென்றாலும் உங்களோடு இருக்கும்.
நீங்கள் மொபைல் தொலைபேசியில் Express Plus Medicare செயலியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் தடுப்பூசி போட்டதற்கான வரலாற்றை இணையத்தளத்தில் பார்த்து, Covid-19 டிஜிட்டல் சான்றிதழைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது இன்னொரு வழி.
COVID-19 certificiate
Source: Services Australia

உங்கள் Medicare கணக்கு விவரங்கள் சரியாகப் பதிவிடப்படவில்லை என்றால், உங்கள் கணக்குகளை இணைக்க முடியாது.

உங்கள் என்பதை விளக்கும் ஒரு சிறிய Services Australia வெளியிட்டுள்ளது.

நீங்கள் Medicare பெற தகுதியற்றவராக இருந்தால், myGov வழியாக Individual Healthcare Identifier Service என்ற சேவையைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளைப் பெறலாம்.  சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம்

பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விவரங்களை, அவர்களது myGov அல்லது Medicare தளத்திலிருந்து பெறலாம்.

உங்கள் digital walletஇல் சான்றிதழைச் சேர்ப்பது எப்படி?

இதனை எளிதில் விளக்க, Services Australia ஒரு வெளியிட்டுள்ளது.  நீங்கள் Medicare சலுகை பெற தகுதியுள்ளவரா என்பதிலும் நீங்கள் மொபைல் செயலியைப் பயன்படுத்துகிறீர்களா என்பதிலும் தங்கியுள்ளன.

உங்கள் தகவல் பாதுகாப்பானதா?

தற்போதைய COVID-19 டிஜிட்டல் சான்றிதழ் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக பல பாதுகாப்புகளை கொண்டுள்ளது என்று Services Australia கூறுகிறது.

இருந்தாலும், Express Plus Medicare செயலில் பெறப்பட்ட Covid-19 தடுப்பூசி சான்றிதழ்களை நகல் எடுத்து போலியான சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், இப்படியான செயற்பாட்டை The Australian Cyber Security Centre கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 16 September 2021 4:48pm
Updated 12 August 2022 2:59pm
By Melissa Compagnoni, Kulasegaram Sanchayan


Share this with family and friends