COVID-19 தடுப்பூசி போடுதல் குறித்த தேசிய செயல் திட்டம் ஒன்றை ஆஸ்திரேலிய அரசு உருவாக்கியுள்ளது.
தடுப்பூசி மிகவும் அவசியம் தேவைப்படுகின்றவர்களுக்கு அது தரப்படுவதை உறுதிசெய்வதற்காக தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பல கட்டங்கள் உள்ளன.
நீங்கள் ஒரு COVID-19 தடுப்பூசியை பெற முடியுமா மற்றும் எங்கு முன்பதிவு செய்யலாம் என்பதை அறிய
தடுப்பூசிக்கான உங்கள் தகுதியை சரிபார்க்க இந்த வலைத்தளத்தின் படிகளைப் பின்பற்றவும்:
தடுப்பூசி பற்றிய தகவலைப்பெற உங்கள் ஜி.பியுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம். அத்துடன் உங்கள் மொழியில் தடுப்பூசி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள :
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் யாவை?
The Australian Technical Advisory Group on Immunisation [ATAGI] 16 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு விருப்பமான தடுப்பூசியாக Pfizer (Comirnaty) தடுப்பூசியை பரிந்துரைக்கிறது.
AstraZeneca தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிற போதிலும், 18 -59 வயதுடையவர்களுக்கும் வழங்கப்படலாம். ஆனால் அவர்கள் தமது மருத்துவருடன் இதுதொடர்பில் கலந்துரையாடுவதுடன் தமது ஒப்புதலையும் வழங்கவேண்டும்.
Moderna தடுப்பூசியும் ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படுவதற்கு provisional அனுமதி கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம்முதல் இத்தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் மருத்துவமனைகள், GP கிளினிக்குகள், சுவாச கிளினிக்குகள், சமூக மருந்தகங்கள் மற்றும் பூர்வீக குடியினருக்கான சுகாதார மையங்களில் தடுப்பூசி போடக்கூடியதாக இருக்கும்.
கலாச்சார ரீதியாகவும், இன ரீதியாகவும், மொழியியல் ரீதியாகவும் மாறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்களும் இதை இலகுவாக அணுகக்கூடியவாறும், கலாச்சார ரீதியாக பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துவதையும் ஆஸ்திரேலிய அரசின் தடுப்பூசித் திட்டம் கவனத்தில் கொண்டுள்ளது.
இதுகுறித்த தகவல்கள் பல்கலாச்சாரப்பின்னணி கொண்ட மக்களை அவரவர் மொழியில் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்
அனைத்து ஆஸ்திரேலிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு COVID-19 தடுப்பூசிகள் இலவசமாகும்.
தடுப்பூசி பெறும் நபர்கள் குறித்த சில தகவல்களை அரசாங்கம் சேமித்து வைக்க வேண்டும். இதற்கமைய தடுப்பூசி வழங்குநர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றவர்களின் விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் தொடர்பிலான தகவல்களை sbs.com.au/coronavirus எனும் நமது இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
கொரோனா வைரஸ் தொடர்பான அரசின் தகவல்கள்
- Department of Health - COVID-19 Vaccine information .
- Department of Home Affairs - COVID-19 information .
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்கள் மாநிலத்தில் கொரோனா தொடர்பாக என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளன என்ற தகவல்களைப்பெற: , , , , , , .
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.