ஊதியத் திருட்டு: இந்தியருக்குச் சொந்தமான உணவகம் மீது விக்டோரியாவின் முதல் வழக்கு!

விக்டோரியாவின் புதிய ஊதியத் திருட்டு சட்டங்களின் கீழ் வழக்கை எதிர்கொள்ளும் முதல் உணவகமாக Macedon Lounge உள்ளது. இந்த உணவகம் இந்திய பின்னணிகொண்ட ஆஸ்திரேலியருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது.

Court

Credit: Public Domain

நேர்மையற்ற முறையில் ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குதல் மற்றும் அவர்களின் உரிமைகளை வேண்டுமென்றே பறித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் முதலாளிகளைத் தண்டிக்கும் சட்டம், விக்டோரிய மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின் கீழ் Macedon Lounge உணவகம் மற்றும் அதன் பொறுப்பாளருக்கு எதிராக விக்டோரியா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 94 குற்றவியல் குற்றச்சாட்டுகளை Wage Inspectorate Victoria தாக்கல் செய்துள்ளது.
இதன்படி Rehmat & Mehar Pty Ltd மற்றும் அதன் பொறுப்பாளர், நான்கு முன்னாள் ஊழியர்களிடம் இருந்து ஊதியம், penalty rates மற்றும் superannuation உள்ளிட்டவற்றில் சுமார் $7,000க்கும் அதிகமான தொகையை வழங்காமல், நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதன் மூலம், ஊதியத் திருட்டுச் சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Rehmat & Mehar Pty Ltd மற்றும் அதன் பொறுப்பாளர் தலா 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

விக்டோரிய ஊதிய திருட்டுச் சட்டம் 2020 இன் கீழ், தவறு செய்ததாக கண்டறியப்படும் நிறுவனம் $1 மில்லியனுக்கும் அதிகமான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் அதேநேரத்தில், தனிநபர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

இச்சட்டத்தின் கீழ் முதன்முறையாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனம் இது என்பதுடன், ஆஸ்திரேலியாவிலேயே இச்சட்டத்தின்கீழ் இத்தகைய வழக்கு நடைபெறுவது இதுவே முதல் முறை.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share
Published 1 December 2022 6:47pm
Updated 1 December 2022 7:08pm
Source: SBS

Share this with family and friends