ஒரு நபரின் இனம், வயது, பாலியல் நோக்குநிலை, கர்ப்பம் அல்லது மதம் போன்ற சிலவற்றின் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒரு முதலாளி பாதகமான நடவடிக்கை எடுக்கும்போது சட்டவிரோத பணியிட பாகுபாடு இடம்பெறுகிறது.
இதில் முழுநேர, பகுதி நேர மற்றும் casual பணியாளர்கள், தகுதிகாண் ஊழியர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கமர்த்தப்பட்ட நபர்கள் என அனைவரும் அடங்குவர்.
பாதகமான நடவடிக்கை என்பது, ஒருவரை பணிநீக்கம் செய்வது, ஊதியத்தை வேண்டுமென்றே குறைத்தல், பதவியிறக்குதல், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தல், ஊழியர்களிடையே பாகுபாடு காட்டுவது உள்ளிட்ட செயல்களைக் குறிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் Patrick Turner சொல்கிறார்.

Source: Pexels/Sora Shimazaki
ஆஸ்திரேலியாவில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க federal, மாநில மற்றும் territory சட்டங்கள் உள்ளதாக மூத்த வழக்கறிஞர் Meghann Papa சொல்கிறார்.
பாகுபாடு சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதைத் தீர்மானிக்க, ஒவ்வொரு நபரின் சூழ்நிலைகளையும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று Meghann Papa கூறுகிறார்.

Mwanaume afanya kazi Source: Pexels/Ron Lach
முதலாளி தனது பணி தொடர்பில் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் பணியாளர் தனது சூழ்நிலைகள் குறித்து அவருக்கு முன்கூட்டியே விளக்கிக்கூறுவது அவசியமாகும்.
Diversity Council-இன் 2019ம் ஆண்டு அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடி மற்றும் ரொறஸ் ஸ்ரெயிட் தீவு பின்னணிகொண்ட மக்கள் அதிகளவான பணியிட பாகுபாட்டினை எதிர்கொண்டுள்ளனர்.
அதேநேரம் வெவ்வேறு தொழில்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ளனர். குறிப்பாக நிதித்துறை மற்றும் சேவைவழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவு பன்முகத்தன்மையை கண்டிருக்கின்றனர். அதேசமயம் உற்பத்தித் துறையில் உள்ள தொழிலாளர்கள் குறைந்த அளவிலான ஆதரவைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

Source: Pexels/Sora Shimazak
Fair Work சட்டதின் கீழ், ஒரு பணியாளரின் குறிப்பிட்ட பண்பு அல்லது பின்னணி காரணமாக முதலாளி அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டவில்லை என்றால், அது பாதகமான செயலாக கருதப்படாது.
எடுத்துக்காட்டாக, பணியாளரின் performance-செயல்திறன் போதியளவில் இல்லை என்றால் அது ஒரு வித்தியாசமான பிரச்சினை எனக்கூறுகிறார் Diversity Council Australia இன் தலைமை நிர்வாக அதிகாரி Lisa Annese.

Source: Pexels/Andrea Piacquadio
பெரும்பாலும் பாகுபாடு காட்டுதல் என்பது நுட்பமான விடயம் என்றபோதிலும், எல்லா நிகழ்வுகளுமே பாகுபாட்டின்கீழ் அடங்காது எனக்கூறும் வழக்கறிஞர் Patrick Turner உதாரணமாக ஒருவர் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லும் சூழலை குறிப்பிடுகிறார்.
ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே பாகுபாடு காட்டப்பட்டதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்வது?
முதலில் உங்கள் முதலாளியிடம் நேரடியாக இது தொடர்பில் பேசுவது முக்கியம் என்றும், அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்றால் தொழில்முறை வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறலாம் என்றும் சொல்கிறார் மூத்த வழக்கறிஞர் Meghann Papa.
ஆஸ்திரேலியாவில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் வலுவான சட்டங்களைப் பற்றி மக்கள் அறிந்திருப்பது முக்கியம் என வழக்கறிஞர் Patrick Turner கூறுகிறார்.

Source: Pexels/fauxels
பணியிட பாகுபாட்டிற்கெதிராக ஒருவர் நடவடிக்கை எடுக்கும்போது, அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படலாம், சில சந்தர்ப்பங்களில் முதலாளிக்கு எதிராக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இழப்பீடு வழங்கலாம் என Patrick Turner கூறுகிறார்
மேலும் தகவலுக்கு அல்லது உதவிக்கு -ஐப் பார்வையிடவும் அல்லது 13 13 94 இல் Fair Work Infoline ஐத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு மொழி பெயர்ப்பு உதவி தேவைப்பட்டால், 13 14 50 இல் Translating and Interpreting Service (TIS) ஐ அழைக்கவும்.
LISTEN TO

உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்?
SBS Tamil
07:13
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.