தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் விசா பாதுகாப்பு!

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா வைத்திருக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?

ஊதியம் மற்றும் பணியிட நிலைமைகளைப் பொறுத்தவரை, அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் இருக்கின்ற அதே உரிமைதான் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவுடன் வாழ்ந்து வருபவர்களுக்கும் இருக்கிறது.

தேசிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு தரநிலைகள் ஆகியன ஆஸ்திரேலியாவில் பணிபுரிபவர்களுக்கு இருக்கவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளை நிர்ணயிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் எந்தவொரு தொழிலாளிக்கும்,awards அடிப்படையில் அல்லது ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆகக்குறைந்தபட்ச ஊதியமாவது வழங்கப்பட வேண்டும்.

இதில் வேறுபாடு கிடையாது. ஆனால் தொழில் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும் வயது அடிப்படையில் பணம் கொடுக்க முடியும். அது அவர்கள் பணிபுரியும் பிரிவு மற்றும் தொழில்துறையைப் பொறுத்தது.
Prime Minister Scott Morrison faces a tough line of questioning while announcing a multi-million-dollar investment into oil refineries ...   ** Labor pledges to strengthen Medicare, but says it won't plan a review to increase the Jobseeker rate
Construction workers are seen working at the Roma Street Station on the Cross River Rail project in Brisbane. Source: AAP
நீங்கள் ஒரு முதலாளிக்காக வேலை செய்கிறீர்கள் என்றால், அந்த வேலைக்காக ஒரு ஆஸ்திரேலியருக்கு என்ன சம்பளம் கிடைக்குமோ உங்களுக்கும் அதேசம்பளம் வழங்கப்படவேண்டும். அது குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

விசாவுடன் வாழ்ந்துவருபவர்கள், சட்ட கட்டமைப்பையும் மீறி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதுடன் பணியிட சுரண்டல் குறித்த புகார்களிலும் அதிகமாக குறிப்பிடப்படுகிறார்கள். பலர் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்.

அடிப்படையில் ஒரு முதலாளி தனது தொழிலாளிக்கு பாதுகாப்பான பணியிட நிலைமையை வழங்க வேண்டும். இது ஒவ்வொரு முதலாளியினதும் கடமையாகும். நீங்கள் எந்த மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல.

அவர்கள் பாதுகாப்பான பணியிட நிலைமையை வழங்கத் தவறி, அதனால் ஒரு தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டால் அந்த தொழிலாளி workers’ compensation எனப்படும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டு உரிமைக்கு தகுதிபெறுவார்.மேலும் பொதுவான சட்ட உரிமைகளையும் அணுக முடியும்.

இப்படியான சூழலின்போது, “என்னைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு இருந்தபோதும், பாதுகாப்பான பணியிட நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து நீங்கள் தவறிவிட்டீர்கள்” என்று உங்கள் முதலாளியிடம் சொல்வதுடன் உங்கள் முதலாளிக்கெதிராக வழக்குத்தொடுக்கலாம்.
Filipino News, Philippine Elections, Federal Elections
Enflasyonun yüzde 5,1'e yükseldiği bir dönemde maaş artışı yüzde 2,4'te kaldı. Source: AAP
பணியிட சுரண்டல் குறித்த மிகவும் பொதுவான புகார்கள், குறைவான ஊதியம் பற்றியதாகும். விசாவுடன் வாழ்ந்துவரும் பலர் இத்தகைய சூழ்நிலைகளில் உதவியற்றவர்களாக உணரலாம்.

ஒரு ஊழியர் தனது முதலாளியால் வழங்கப்பட்ட விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தால், அதன் காரணமாக அவர் கட்டுப்படுத்தப்படலாம்.

நாடுகடத்தப்படுவோம் என அஞ்சாமல், பணியிட சுரண்டலுக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு, விசாவுடன் வாழ்ந்து வருபவர்களை Fair Work Ombudsman ஊக்குவிக்கிறார்.
Fair Work Ombudsman
Fair Work Ombudsman Source: SBS
Fair Work Ombudsman-க்கும் உள்துறை அமைச்சுக்கும் இடையில் ஒரு உடன்பாடு உள்ளது. இது ஒரு உத்தரவாத நெறிமுறை என்று அழைக்கப்படுகிறது. இதன்படி விசாவுடன் வாழ்ந்துவரும் ஒருவரது வேலை தொடர்பாக விசா நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால், தனது விசா ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சமின்றி அவர் Fair Work Ombudsman உதவியை நாடமுடியும்.

உதாரணமாக ஒருவரது விசா நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் அவர் அதிக மணிநேரங்கள் வேலை செய்திருந்தால், சுரண்டலுக்கு உள்ளாகியிருந்தால், அவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொடுப்பதை Fair Work Ombudsman உறுதிசெய்யும்.

தொழிலாளர்கள் தமக்கு என்ன ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதை Fair Work Ombudsman- இன் ‘Pay and Conditions’ என்ற அம்சத்தைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 27 April 2022 4:04pm
Updated 27 April 2022 4:15pm

Share this with family and friends