வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வது பற்றி யோசிக்கிறீர்களா? உங்கள் பயணம் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றால், வரும் வாரங்களில் ஐரோப்பாவை விட ஆசிய நாடுகளை நீங்கள் தெரிவுசெய்யலாம்.
ஆஸ்திரேலிய டொலர் கடந்த வாரம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய டொலர் ஏற்ற இறக்கமாக உள்ளது என்றும் அமெரிக்க டொலருக்கு எதிராக வலுவாக இல்லை எனவும் சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த எட்டு மாதங்களில் ஆஸ்திரேலிய டொலருக்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 65-70 சதங்களுக்கு இடையில் உள்ளது. அந்தவகையில் பார்க்கும்போது ஆஸ்திரேலிய டொலர் வலுவான நிலையில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்த 12 மாதங்களில் உலகளாவிய அழுத்தங்கள் ஆஸ்திரேலிய டொலரைப் பாதிக்கலாம் என்றபோதிலும் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வட்டி விகித உயர்வுகளும் இதனைப் பாதிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள உள்ளூர் நாணயங்களுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய டொலர் எவ்வாறு உள்ளது என்ற விவரம் இங்கே தரப்படுகிறது:
ஜப்பான்
விடுமுறைக்காக ஜப்பானுக்குச் செல்ல இது சிறந்த நேரம் என்று IG Markets analyst Tony Sycamore, SBS செய்தியிடம் தெரிவித்தார்.
அக்டோபர் 2022ல் இருந்து ஜப்பானிய yenக்கு எதிராக ஆஸ்திரேலிய டொலர் 7.1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு ஆஸ்திரேலிய டொலர் 97 yenகளாக காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஜப்பான் கடந்த ஆண்டு அக்டோபரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அதேநேரம் இது ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பிரபலமான நாடாகும்.

The Australian dollar has been strong against the Japanese yen. Source: AAP / Kimimasa Mayama/EPA
சீனா
கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஒப்பீட்டளவில் பலவீனமான Chinese renminbi (CNY) யுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய டொலர் கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு ஆஸ்திரேலிய டொலர் 4.87 Chinese renminbi (CNY) ஆக தற்போது காணப்படுகின்றது.
இந்தோனேசியா
பாலிக்கு (அல்லது பிற இந்தோனேசிய தீவுகளுக்கு) ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நல்ல செய்தி - கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இந்தோனேசிய rupiahக்கு எதிராக ஆஸ்திரேலிய டொலர் 7.82 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு டொலர் 10,290 rupiahகளை உங்களுக்கு கொடுக்கும்.

Canggu beach, just north of Kuta and Seminyak in Bali, Indonesia Source: AAP, Press Association / Sergi Reboredo/Alamy
இந்தியா
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய்க்கு எதிராக ஆஸ்திரேலிய டொலர் 10.1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு டொலருக்கு 56 ரூபாய்கள் தற்போது கிடைக்கும்.
இது இந்த ஆண்டு பிப்ரவரியில் காணப்பட்ட அதிகரிப்பிலிருந்து சற்று குறைந்துள்ளது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலை அதன் வலுவான மட்டங்களில் ஒன்றாகும்.
இலங்கை
இலங்கையைப்பொறுத்தளவில் கடந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் மிகவும் வலுவாகக் காணப்பட்ட ஆஸ்திரேலிய டொலர் பின்னர் படிப்படியாக வலுவிழந்தது. எனினும் சமீபகாலமாக ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு சற்று அதிகரித்துவருகிறது. தற்போது ஒரு ஆஸ்திரேலிய டொலருக்கு சுமார் 200 இலங்கை ரூபாய்கள் கிடைக்கின்றன.
நோர்வே மற்றும் ஸ்வீடன்
நோர்வே மற்றும் ஸ்வீடனில் ஆஸ்திரேலிய டொலர் மிகவும் வலுவாக உள்ளது. மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Norwegian krone மற்றும் Swedish kronaவுக்கு எதிராக 10 வருட உயர்வை எட்டியது.
தற்போது ஒரு டொலர் 7.2 Norwegian krone மற்றும் 7.3 Swedish kronaவை கொடுக்கும்.

Stockholm, Sweden. The Australian dollar is buying about 7.3 Swedish krona. Source: AAP / James Lane
இதன் அடிப்படையில், அதிகமான ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கு அல்லது அதன் நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளான Costa Rica, Puerto Rico, Ecuador அல்லது பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்லலாம் என ஆலோசனை கூறப்படுகிறது.
துருக்கி, லெபனான் மற்றும் அர்ஜென்டினா
ஆகிய நாடுகள் நாணயச் சரிவைச் சந்தித்து வருவதால், ஆஸ்திரேலிய டொலர் கோட்பாட்டு அடிப்படையில் அங்கு வலுவாக இருக்கும்.
ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்மத்தியில் மிகவும் பிரபலமான இடமான நியூசிலாந்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய டொலர் சற்று அதிகரித்துள்ளது. தற்போது ஒரு ஆஸ்திரேலிய டொலர் NZD1.10 மதிப்புடையது.

Tauranga viewed from Mount Maunganui, New Zealand. One dollar is worth about NZD$1.10 at the moment. Source: AAP, SIPA USA / Gado Images
ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான மற்றொரு பொதுவான இடம் இங்கிலாந்து. ஆனால் டொலர் poundக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. இது 2.64 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு ஆஸ்திரேலிய டொலர் இப்போது 54 penceஸில் உள்ளது.
அதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து Mexican pesoவிற்கு எதிராக ஆஸ்திரேலிய டொலர் 5 சதவீதம் சரிந்துள்ளதால், கோடைகால விடுமுறையைத் தேடும் ஆஸ்திரேலியர்களுக்கு மெக்சிகோ சிறந்த தெரிவாக இருக்காது.