ஆஸ்திரேலியாவில் தற்போது Pfizer, Astrazeneca ஆகிய இரண்டு கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பின்னணியில் தற்போது மூன்றாவதாக Moderna தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.
இதற்கான provisional approval -அனுமதியை ஆஸ்திரேலிய மருந்துக்கட்டுப்பாட்டு வாரியமான Therapeutic Goods Administration (TGA) வழங்கியுள்ளதாக பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.
Therapeutic Goods Administration (TGA)இன் அனுமதியானது தற்போதைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி ஆஸ்திரேலியாவிலுள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் Moderna தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கான அனுமதியை TGA வழங்கியுள்ளது.
mRNA 1273 என்று அழைக்கப்படும் Moderna தடுப்பூசி Pfizer நிறுவனத்தின் தடுப்புமருந்துக்கு இணையான அதே தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தடுப்புமருந்தாகும். mRNA என்ற genetic materials - மரபியல் பொருட்களை உடலில் செலுத்தி, உடலில் covid 19 இற்கு எதிரான எதிர்ப்புச்சக்தியை இது ஏற்படுத்துகிறது. இதுவும் இரண்டு dose கள் , 28 நாள் இடைவெளியில் செலுத்தப்படவேண்டும். Pfizer தடுப்புமருந்து -80 C இல் பத்திரப்படுத்தப்படவேண்டும். ஆனால் Moderna தடுப்பு மருந்தை -20 C இல் வைத்திருக்கலாம் அதாவது வீட்டிலுள்ள fridge இல் freezer பகுதியில் வைத்துக்கொள்ளலாம் என்பதும் சாதாரண fridge களில் 30 நாள் வரை வைத்திருக்கமுடியும் என்பதும் மேலதிக வசதியாக பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பு மருந்தின் மோசமான பக்க விளவுகள் மற்றும் இவற்றின் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு பற்றி இதுவரை மதிப்பீடுகள் தரவுகள் வெளிவந்துள்ளன.
Moderna தடுப்பூசி Covid 19 தொற்றிற்கு எதிராக 94.1 சதவீதம் தொடக்கம் 100 சதவீத ஆற்றல் கொண்டது என்பது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 99 இடங்களில் 30000 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட clinical trials மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் ஆற்றல் உள்ளது என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
18 வயது தொடக்கம் 64 வயதினருக்கிடையே நடத்தப்பட்ட clinical trials களின் போது, பொதுவாக இலேசான தலைவலி மற்றும் தசைநார்களில் ஏற்படும் வலி, இலேசான காய்ச்சல், ஊசி ஏற்றப்பட்ட இடத்தில் வலி என்பன போன்ற சாதாரண பக்க விளைவுகள் மாத்திரமே பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மிகச்சிலருக்கு மட்டும் அன்றாட பணிகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கான 1 மில்லியன் Moderna தடுப்பூசிகள் அடுத்தமாதம் முதற்கட்டமாக வந்தடையவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சுமார் 25 மில்லியன் Moderna தடுப்பூசிகளைப் பெறுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இதில் 15 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டுமுதல் வரத்தொடங்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
- செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:
- ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: , , , , , , .
- கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: .
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.