ஆண்டொன்றுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை 190,000 என்ற அளவிலேயே பேணுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இதில் 70 வீதமான இடங்களை skilled migrants-க்கு அரசு ஒதுக்குகிறது.
இருப்பினும், Partner மற்றும் Child விசாக்கள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
வெளிநாட்டிலிருந்து வேலைக்கு விண்ணப்பிப்பவர் ஒரு முதலாளியிடம் இருந்து sponsorship பெறும்போது அவருக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்படி $53,900 ஆக காணப்பட்ட Temporary Skilled Migration Income Threshold (TSMIT) வருமான வரம்பு, ஜூலை 1 முதல் $70,000 ஆக உயர்த்தப்படும்.
மாணவர் விசாவில் மாற்றங்கள்
ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் பணிபுரியக்கூடிய மணிநேரங்கள் குறித்த புதிய வரம்பு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு மாணவர்கள், இருவாரங்களுக்கு 40 மணிநேரங்கள் (40 hours per fortnight) என்பதைற்குப் பதிலாக, எத்தனை மணிநேரங்களும் வேலைசெய்யலாம் என்பதான சலுகை ஜுன் 30ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
கொரோனா பரவலையடுத்து இச்சலுகை வழங்கப்பட்டிருந்த பின்னணியில், 2023 ஜுலை 01 முதல் வெளிநாட்டு மாணவர்கள் இருவாரங்களுக்கு 48 மணிநேரங்கள் மட்டுமே வேலைசெய்யலாம் என்ற புதிய வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது.
இதுஒருபுறமிருக்க subclass 485 Temporary Graduate விசா வைத்திருப்பவர்களில் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் தங்க முடியும்.
தற்போதுள்ள நடைமுறையின்படி bachelor's degree கற்கைநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் தமது படிப்பு முடிந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிய முடியும். Master's கற்கைநெறியை மேற்கொள்பவர்கள் 3 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 4 ஆண்டுகளும் இங்கு தங்கியிருக்க முடியும்.
அரசு அறிவித்துள்ள புதிய மாற்றத்தின்படி bachelor's degree முடித்த மாணவர்கள் இனிமேல் 4 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரியலாம்.
Master's மாணவர்கள் 5 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 6 ஆண்டுகளும் இங்கு தங்கியிருந்து வேலைசெய்ய முடியும்.
நிரந்தர வதிவிடத்திற்கான வாய்ப்பு
Temporary skill shortage (TSS) subclass 482 விசாவில் இருப்பவர்கள் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பது எளிதாகிறது.
TSS Short-term stream விசா வைத்திருப்பவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைபெற ஏதுவாக, Employer Nomination Scheme (subclass 186)க்கான கட்டுப்பாடுகள் அகற்றப்படும்.
TSS Short-term stream விசாவிற்கான onshore renewal வரம்பையும் அரசு அகற்றுகிறது.
தற்போது, 173,000 புலம்பெயர்ந்தோர், தற்காலிக வேலை அல்லது மாணவர் விசாவில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.
விசா விண்ணப்பச் செலவு அதிகரிப்பு
ஜூலை 1, 2023 முதல் விசா விண்ணப்பக் கட்டணங்களை 6 சதவீதத்தால் அரசு அதிகரிக்கிறது.
Visitor 600 விசா விண்ணப்பக் கட்டணம் $40 அதிகரித்து, $150 இலிருந்து $190 ஆக அதிகரிக்கிறது.
Student 500 விசா விண்ணப்பக் கட்டணம் $65 ஆல் அதிகரித்து $650இலிருந்து $715 ஆக அதிகரிக்கிறது.
Working holiday விசா விண்ணப்பக் கட்டணம் $130 ஆல் அதிகரித்து $510இலிருந்து $640 ஆக உயர்த்தப்படும்.
Pacific Engagement விசா மற்றும் Pacific Australia Labour Mobility scheme விசாக்களுக்கு மட்டுமே அதிகரிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதிகரிக்கப்படும் விசா கட்டணங்கள் மூலம் 2023-24ல் 100 மில்லியன் டொலர்களையும், ஐந்து ஆண்டுகளில் 665 மில்லியன் டொலர்களையும் அரசு பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை விசா பரிசீலனை காலத்தை விரைவுபடுத்துவதற்கும், தற்போதுள்ள விசா செயலாக்க முறைகளை மேம்படுத்துவதற்கும், 2023-24 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் $75.8 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இறுதியான மற்றும் விரிவான குடிவரவு கொள்கை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது