மெல்பன் தடுப்புமைய காவலருக்கு COVID-19 தொற்று! புகலிடக்கோரிக்கையாளர் கவலை

மெல்பன் குடிவரவு தடுப்பு மையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கும் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக பலரும் அஞ்சுகின்றனர்.

Signage is seen along the perimeter fence of the Melbourne Immigration Transit Accommodation complex in Broadmeadows, Melbourne.

Signage is seen along the perimeter fence of the Melbourne Immigration Transit Accommodation complex in Broadmeadows, Melbourne. Source: AAP

மெல்பன் குடிவரவு தடுப்பு மையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று Australian Border Force (ABF) - ஆஸ்திரேலிய எல்லைப் படை இன்று உறுதி செய்தது.

தடுப்பில் வைக்கப் பட்டிருப்பவர்கள் எவருக்கும் தொற்று இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று ABF செய்தித் தொடர்பாளர், SBS செய்திப் பிரிவினருக்கு வழங்கிய ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
Protesters at the Melbourne Immigration Transit Accommodation Centre in Melbourne in June 2020.
Protesters at the Melbourne Immigration Transit Accommodation Centre in Melbourne in June 2020. Source: AAP
“Melbourne Immigration Transit Accommodation (MITA) Broadmeadows Residential Precinct என்ற மெல்பன் தடுப்பு மையத்தில் பணியாற்றும் ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்பதை ABF அறிந்திருக்கிறது” என்றும்

“தொற்று ஏற்பட்டவர் அங்கு தடுத்து வைக்கப் பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவில்லை என்றும், அவர் கடைசியாக 12 நாட்களுக்கு முன்பு பணியாற்றினார்” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு அமையவே தொற்று ஏற்பட்டவர் நடந்துள்ளார் என்பதை ABF உறுதி செய்துள்ளது.

முன்னதாக, COVID-19 தொற்று தம்மிடையே பரவக்கூடும் என்று தான் அஞ்சுவதாக, மெல்பன் Park Hotel இல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் AAPயிடம் கூறியுள்ளார்.
தடுப்பு முகாமிலிருந்து ஹோட்டலுக்கும், ஹோட்டலில் இருந்து தடுப்பு முகாமிற்கும், தடுத்து வைக்கப்பட்டவர்கள் இடம் மாற்றப் படுகிறார்கள். ஆனால், தொற்று ஏற்பட்ட காவலர் ஹோட்டலுக்குச் செல்லவில்லை என்று ABF அதிகாரி கூறினார்.
ஆனால், அது உண்மையா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்று, தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவர், AAPதொற்று ஏற்பட்டவர் AAPயிடம் கூறினார்.
இங்குள்ளவர்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள்
காவலர்கள் தங்கள் முக கவசங்களை சரியாக அணிவதில்லை என்பதால், தாம் ஆபத்தில் இருப்பதாகக் கவலைப்படுவதாக அவர் கூறினார்.
MITAயில் பணிபுரியும் மற்றொரு காவலருக்கும் தொற்று இருக்கிறது என்று நேற்று சனிக்கிழமை தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் பணி புரிந்த அதே நேரம் குறைந்தது ஒன்பது காவலர்கள் அங்கே பணியாற்றியிருக்கிறார்கள் என்பதால், அந்த ஒன்பது பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று Refugee Action Coalition கூறுகிறது.
Victorian COVID-19 Commander Jeroen Weimar addresses the media during a press conference in Melbourne.
Victorian COVID-19 Commander Jeroen Weimar addresses the media during a press conference in Melbourne. Source: AAP
தடுப்பு முகாமில் பணியாற்றிய காவலருக்குத் தொற்று இருப்பதை Victorian COVID-19 Commander Jeroen Weimar உறுதிப்படுத்தினார்.  ஆனால், இந்தத் தடுப்பு முகாமில் வேறு யாருக்காவது தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து மேலும் எதுவும் தெரியாது என்று கூறினார்.

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் (அவர்கள் விரும்பினால்) அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக ABF செய்தித் தொடர்பாளர் கூறினார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 5 September 2021 4:17pm
By Kulasegaram Sanchayan
Source: AAP, SBS


Share this with family and friends