ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் புதிய வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இவ்வாரம் 37,796 புதிய தொற்றுகள் இனங்காணப்பட்டுள்ளன. இது 20 சதவீத அதிகரிப்பாகும்.
விக்டோரியாவில் 26,971 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது 21 சதவீத அதிகரிப்பாகும்.
எவ்வாறாயினும், நாட்டில் கிறிஸ்மஸுக்கு முன் தற்போதைய அல்லது நான்காவது அலை உச்சத்தை எட்டக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் Lagevrio என்ற ஆன்டிவைரல் மருந்தைப் பயன்படுத்துவதை மெல்பனில் உள்ள Peter Doherty Institute for Infection and Immunity ஆதரித்துள்ளது.
Lagevrio இனி இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் பரிந்துரைக்கப்படமாட்டாது.
Pfizerஇன் Paxlovid முன்னணி ஆன்டிவைரல் மாத்திரையாக உள்ளது, ஏனெனில் இது கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான மற்றும் இறப்பதக்கான அபாயத்தை 89 சதவீதம் குறைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் சமீபத்திய தரவு, அக்டோபர் 31 வரை கோவிட்-19 உடன் அல்லது அதன் காரணமாக 13,021 பேர் இறந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
4000 பயணிகளுடன் மெல்பன் திரும்பிய பயணக் கப்பலிலிருந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Grand Princess கப்பலில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
2021 முடக்கநிலையின்போது கோவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட 62,138 அபராதங்களில், 33,121 அபராதங்களை NSW அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த அபராதங்கள், அபராதச் சட்டத்தின் கீழ் கூறப்படும் குற்றத்தை போதுமான அளவு விவரிக்கவில்லை என்று NSW உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது.
ஏற்கனவே அபராதம் செலுத்தியவர்களுக்கு அப்பணத்தை மாநில அரசு திருப்பி அளிக்கும்.
பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, வரும் நாட்களில் சீன அதிகாரிகள் தங்கள் கோவிட் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளை எளிதாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிய உலகளாவிய கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நிலையானதாக இருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜப்பான், கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவை அதிகளவில் வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.