NSW மாநில அரசின் என்ற திட்டத்தின் $80 மில்லியன் விரிவாக்கத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் IVF - செயற்கையாக கருவுறுதல் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அவர்களின் சிகிச்சைக்கான செலவில் $2000 டாலர்கள் மீளப்பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் சுமார் 12,000 பெண்கள் பயன்யடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது..
IVF தள்ளுபடிக்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
Fertility Treatment Rebate எனப்படும் தள்ளுபடியை MyService NSW கணக்கு மூலம் இணையம் வழியாகவோ அல்லது Service NSW மையத்தில் நேரிலோ பெறலாம்.
பெண்கள், மற்றும் பெண் என்று அடையாளம் காணாத ஆனால் IVF சிகிச்சையைப் பெறக்கூடியவர்கள் மற்றும் NSW இல் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் அவர்கள் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நீங்கள் அங்கீகாரம் பெற்ற கருவுறுதல் வழங்குநரிடமிருந்து சிகிச்சையைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் வேறொரு அரச திட்டம் மூலம் எந்த பணத்தையும் மீளப்பெறாமல் இருக்கவேண்டும்.
2022 அக்டோபர் முதலாம் தேதி முதல் IVF சிகிச்சை பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணத்தை மீளப்பெறலாம்.
NSW மாநிலத்தில் உள்ள தம்பதிகளில் 16 சதவீதம் பேர் கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பிராந்திய பகுதிகளில் உள்ள பெண்களும் சிட்னி போன்ற நகருக்கு பயணித்து IVF செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுக்கொண்டால் அவர்களும் இந்த திட்டம் மூலம் பயனடையலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.