இந்தியா குஜராத்தைச் சேர்ந்த ரியா பட்டீல் என்ற மாணவி, ஆஸ்திரேலியாவில் கல்விகற்பதற்காக வந்து இரண்டே மாதங்களில் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல், சிட்னியிலிருந்து Wollongong-ற்கு தன் நண்பர்களுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது< துரதிர்ஷ்டவசமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் Picton பகுதிக்கு (சிட்னி) அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ரியா மாத்திரம் உயிரிழந்த அதேநேரம், காரின் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த ஏனையோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு வாகனத்துடன் மோதுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கல்விகற்கும் கனவுடன் ஆஸ்திரேலியா வந்த ரியாவின் வாழ்க்கை பாதியிலே முடிந்துவிட, அவரது உடலையேனும் இந்தியாவிலுள்ள அவரது குடும்பத்தினரிடம் அனுப்பிவைக்க வேண்டுமென்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக ரியாவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கென gofundme ஊடாக நிதிசேகரிப்பு ஒன்றும் நடத்தப்பட்டு, அதில் கிடைக்கும் நிதி ரியாவின் உடலை இந்தியா அனுப்பிவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிதியுதவி ஊடாக சுமார் 35000 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14. More information and support with mental health is available at and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.