கொல்லப்பட்ட நால்வரும் ஆண்கள் எனவும், Shepparton பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் வேலைசெய்துவிட்டு நண்பரின் காரில் திரும்பிப் போய்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியா பொலிஸாரின் கூற்றுப்படி, Pine Lodge North Roadஇலுள்ள ஒரு சந்தியில் மாலை 4:45 மணியளவில் Peugeot கார் ஒன்றும் Toyota Hilux ute-உம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
Peugeot இன் ஓட்டுநர் மார்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார், மற்ற வாகன ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
Peugeot காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த மூவரும் seatbelt-ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
"துரதிர்ஷ்டவசமாக, காரின் பின் இருக்கைகளில் இருந்த மூன்று பேரும் வெளியே தூக்கிவீசப்பட்ட நிலையில் இறந்தனர். முன் இருக்கையில் இருந்த பயணி தூக்கி வீசப்படாதபோதிலும் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்" என Acting Assistant Commissioner Justin Goldsmith, SBS Hindi-இடம் தெரிவித்தார்.
Peugeot காரின் ஓட்டுநருக்கு Royal Melbourne மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் கூறினார். அதேநேரம் இறந்த நான்கு பேரும் இந்தியப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு Goldsmith, "நீங்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புதியவராக இருந்தால், போக்குவரத்து விதிகளைப் பற்றி அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
"ஆஸ்திரேலியாவில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும், இங்கு புதிதாக குடியேறியவர்களும் போக்குவரத்து விதிகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
விக்டோரியாவில் வாகனத்தில் செல்லும்போது ஆசனப்பட்டி அணியாவிட்டால் கிட்டத்தட்ட 370 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க இந்த விபத்து குறித்த விசாரணைகளை சிறப்பு புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14. More information and support with mental health is available at and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.