Centrelink கொடுப்பனவு பெறுபவர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கான உதவித்தொகை, மார்ச் 20 முதல் அதிகரிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட மீளாய்வின் பின்னரான கொடுப்பனவு அதிகரிப்பின் ஊடாக, நாடு முழுவதுமுள்ள சுமார் 4.7 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் பயனடையவுள்ளனர்.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவரும் பின்னணியில், இதனைச் சமாளிப்பதற்கு உதவும்வகையில், ஆஸ்திரேலியர்களுக்கான கொடுப்பனவு 3.7 வீதத்தால் உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி எந்தெந்தப் பிரிவுகளில் உள்ளோர் எத்தனை டொலர்களை அதிகமாகப் பெறவுள்ளனர் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படுவது இருவாரங்களுக்கான கொடுப்பனவுத்தொகையாகும்.
Age and Disability Support Pension and Carer Payment
தனிநபர் $37.50 ( இருவாரங்களுக்கான மொத்த தொகை
$1,064)
தம்பதி $56.40 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$1604)
Jobseeker & Abstudy
தனிநபர் $27.40 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$701.90)
தம்பதி $45 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$639.10)
Parenting Payment
தனிநபர் $33.90 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$967.90)
Commonwealth Rent Assistance
தனிநபர் $5.60 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$157.20)
ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளையுடையோர் $6.58 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$184.94)
மூன்று அல்லது இரண்டு பிள்ளைகளையுடையோர் $7.42 (இருவாரங்களுக்கான மொத்த தொகை
$208.74)
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.