வேலைத்தலங்களின் செயல்பாடு குறித்த Fair Work Act என்ற சட்டத்தில் இதற்கான மாற்றங்களை செனட் சபை நேற்று முன் தினம், புதன்கிழமை நிறைவேற்றியது.
இந்த மாற்றங்கள் இனி நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டும்.
செனட் சபையின் முடிவை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் Samantha Payne வரவேற்றார்.
இந்த நிலையை நாம் எட்டியிருப்பது நம்ப முடியாதது. தொலைந்துபோன எங்கள் எல்லாக் குழந்தைகளுக்கும் இது செல்லுபடியாகும்
என்று அவர் SBS செய்திப் பிரிவினரிடம் தெரிவித்தார்.
நான்கு கர்ப்பங்களில் ஒன்று கருச்சிதைவில் முடிவடைகிறது என்று இந்த வாரம் செனட் சபை விவாதத்தின் போது கூறிய Liberal கட்சி செனட்டர் Hollie Hughes, மக்களிடையே ஒரு களங்கமான விடயமாக இது பார்க்கப்படுகிறது. நாம் பேசாத அல்லது பேசக்கூடாத ஒரு விடயமாக இன்றும் இருக்கிறது என்றார்.
தான் பிறப்பதற்கு முன்னர், தனது தாய்க்கு ஏழு கருச்சிதைவுகள் ஏற்பட்டதை செனட்டர் Hollie Hughes வெளிப்படுத்தினார்.
ஆஸ்திரேலியாவில் நான்கு கர்ப்பங்களில் ஒன்று கருச்சிதைவில் முடிவடைகிறது என்றும் அவற்றில் பெரும்பாலானவை முதல் 12 வாரங்களில் நிகழ்கின்றன என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும், 282 பெண்கள் கர்ப்பமாகி 20 வாரத்திற்கு முன்னரே கருச்சிதைவை அனுபவிக்கிறார்கள். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் கருச்சிதைவை அனுபவிக்கிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.