ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய வேலையைப் பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் எழுதப்படாத விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம் எனவும் அவை ஒருவரின் தொழில் முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் சொல்கிறார் UTS Business School-இன் Associate Dean (Academic Staffing) மற்றும் இணைப் பேராசிரியரான Robyn Johns.
எழுதப்படாத விதிகளில் உங்கள் மேசையில் அமர்ந்தபடி சாப்பிடுதல் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுதல், அல்லது பணியிடத்தில் உங்கள் சமூக செயல்பாடுகளைப் பற்றி பேசுதல் போன்றனவெல்லாம் உட்பட்டிருக்கலாம் என இணைப் பேராசிரியர் Robyn Johns சுட்டிக்காட்டுகிறார்.
நாம் அணியும் ஆடை தொடர்பில் கவனம் செலுத்துவதும் பணியிட கலாச்சாரத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.பல பணியிடங்கள் casual அல்லது business-casual ஆடைகளை விரும்புகின்றன. அலுவலக ஆடைகள் தொழில், நிறுவனம் மற்றும் குறிப்பிட்ட பணியிடத்தைப் பொறுத்து பரவலாக மாறுபடும்.
ஆடைகளுக்கு அப்பால் அலுவலகத்தில் உள்ள மற்றவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பது குறித்தும் எழுதப்படாத விதிகள் இருப்பதாக இணைப்பேராசிரியர் Johns கூறுகிறார்.

A diverse team of Australian professionals collaborating in a Sydney office. Credit: pixdeluxe/Getty Images
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பணியிட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விரிவான கட்டமைப்பு உள்ளது என்கிறார் குயின்ஸ்லாந்தை தளமாகக் கொண்ட Multicultural Australia தலைமை நிர்வாக அதிகாரி Christine Castley.
Nejat Basar, SBS Turkishஇன் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் ஆவார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்பு 20 ஆண்டுகள் துருக்கியில் பணியாற்றியிருக்கிறார். துருக்கியுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரம் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில், bullying எனப்படும் கொடுமைப்படுத்துதல் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, மேலும் பணியிடங்கள் உட்பட அனைத்து கட்டமைப்புக்களிலும் அதை நிவர்த்தி செய்வதற்கும் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் உள்ளன.

Sometimes not understanding the unwritten rules in the workplace can lead to a person becoming isolated. Credit: pixdeluxe/Getty Images
ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கு விருப்பமான அலுவலக தொடர்பு வடிவமாக கைகுலுக்கல், தலையசைப்புகள் அல்லது வாய்மொழி வாழ்த்துக்களை பயன்படுத்துகின்றனர்.
இதேவேளை ஆஸ்திரேலிய பணியிடங்களில் நமது நாட்டு கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றுவது சிறந்த நடைமுறையாக இருக்காது எனக்கூறும் Christine Castley அனைவரையும் கட்டியணைப்பது, கன்னத்தில் முத்தமிடுவது போன்ற முறைகள் சில நாடுகளில் காணப்படுவதை சுட்டிக்காட்டுகிறார்.
நேரம் தவாறாமை ஆஸ்திரேலிய பணியிடங்களில் மிகவும் மதிக்கப்படுகிறது. இது மற்றவர்களின் நேரத்தை மதிப்பதைக் காட்டும் அதேநேரம் தொழில்முறையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் மணிநேரங்களைப் பற்றிப் புரிந்துகொள்வதும் முக்கியம் என இணைப் பேராசிரியர் Robyn Johns வலியுறுத்துகிறார்,

After securing a new job in Australia, it’s essential to understand the company’s unspoken rules. Credit: xavierarnau/Getty Images
இருப்பினும், புலம்பெயர்ந்தோர் சிலர் இந்த நடைமுறையை நன்கு அறிந்திருக்க மாட்டார்கள், மேலும் இது நெறிமுறையற்றதாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் அவர்கள் கருதலாம்.
எனவே சில நேரங்களில் பணியிடத்தில் எழுதப்படாத விதிகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு நபர் தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம்
புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு தமது நடத்தைக் கோட்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரியப்படுத்துவதற்கு மேலதிகமாக அங்கு பின்பற்றப்படும் எழுதப்படாத விதிகள் தொடர்பில் சக பணியாளர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனவும் பணியிடத்தில் நண்பர்களை உருவாக்குவதன் மூலம் இந்நடைமுறையை எளிதாக்கலாம் எனவும் Christine Castley பரிந்துரைக்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Do you have any questions or topic ideas? Send us an email to