SBS Examines : அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா?

A man, completely obscured in shadow looks away

People who say they are struggling financially are less likely to believe that ‘accepting migrants from many different countries has made Australia stronger’. Source: Getty / Jordan Lye

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் இன்று அது ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை உருவாக்குவது தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.


வாடகைக்கு வீடு ஒன்றை பிடிப்பதில் நிலவும் சிரமம் நாட்டினுள் மக்கள் புதிதாக குடியேறுவது மற்றும் இடம்பெயர்வது குறித்த தனது சில கருத்துக்களை மாற்றியுள்ளதாக குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஜான் SBS Examines-இடம் கூறினார்.

ஜான் தனது துணையை பிரிந்தபோது, அவர் வாடகைக்கு வீடு எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.

குயின்ஸ்லாந்தின் கிராமப்புறம் ஒன்றில் வசிக்கும் அவர், வேலை விடுமுறை விசாக்களை நீட்டிக்க விரும்பும் நபர்களுடன் வாடகை வீடு் பிடிக்க போட்டியிடுவதைக் கண்டதாகக் கூறினார்.

ஜான் தனியாக இல்லை.

Scanlon இன்ஸ்டிட்யூட்டின் சமூக ஒருங்கிணைப்பு குறியீட்டின்படி, பொருளாதார அழுத்தம் இன்று ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது.

சிட்னி Northern Beaches பகுதியின் ஒரு சமூகத் தலைவர் ரேச்சல் லியா ஜாக்சன்.

நிதி நெருக்கடியை அனுபவிப்பவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவு இருப்பதாக அவர் கூறுகிறார்.


SBS Examines-இன் இந்த நிகழ்ச்சி, வாழ்க்கைச் செலவுகள் எப்படி நம் சமூகங்களை பிளவுபடுத்துகிறது என்பதை ஆராய்கிறது.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share