SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறதா?

Australians Head To The Polls To Vote In 2019 Federal Election

Australians head to the polls to vote in 2019 Federal Election Source: Getty / James D. Morgan

ஜனநாயகம் நமது மிக மதிப்புமிக்க தேசிய சொத்து என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? அது சரிவில் உள்ளதா? இது குறித்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி.


ஜனநாயகம் என்பது மக்களால் நடத்தப்படும் அரசு.

ஆஸ்திரேலியாவில் 77.4% மக்கள் பொதுவாக நமது ஜனநாயகத்தில் திருப்தி அடைந்துள்ளனர்.

இது ஒரு நல்ல நம்பிக்கையான புள்ளிவிவரம் போல் தெரிகிறது.

ஆனால், இது உண்மையில் முந்தைய 15 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையாகும்.

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நாடாளுமன்றங்களில், அரசியல்வாதிகள் மற்றொரு ஜனநாயக உரிமையைப் பற்றி விவாதித்து வருகின்றனர் - அது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்.

உண்மையில், உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70% இப்போது ஒருவகையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

ஒரு வகையான சர்வாதிகார ஆட்சி போன்ற மோசமான மாற்றங்களில் இருந்து ஆஸ்திரேலியா பாதுகாக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா இன்ஸ்டிட்யூட்டின் ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறல் திட்டத்தின் இயக்குனரான Bill Browne கூறுகிறார்.

SBS Examines -இன் மேலதிக தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட விவரணங்களுக்கு sbs.com.au/sbsexamines இணையப்பக்கத்தை பார்வையிடவும்.





SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லவும். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘எனத் தேடுங்கள்.

Share