நம் நாட்டில், இப்படியான விரைவான Antigen சோதனைகளின் பயன்பாட்டிற்கு, மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration (TGA) அனுமதி வழங்கி, இந்த மாத ஆரம்பத்திலிருந்து மருந்தகங்களிலும் இதனை மக்கள் வாங்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சோதனை நம்பகமானதா என்ற கேள்வி பலரிடமிருந்து எழுந்துள்ளது. இது குறித்து, Lithgow என்ற இடத்தில் மருந்தகம் ஒன்றை நடத்துகின்ற கோபிகா சிறீகாந்தன் மற்றும் மருத்துவமனை ஒன்றில் முதியோர் பராமரிப்பு மருந்தாளாராகக் கடமையாற்றும் அனீட்டா சிவசுப்ரமணியம் ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.