கருணைக்கொலையை அனுமதிக்கலாமா?

Euthanasia march

Source: SBS

இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தபின்னர், உடல் உபாதை, வருத்தம், வலி இவற்றினால் மேலும் துன்புறாமல் இறந்துவிடுவதே நல்லது என்று ஒருவர் முடிவு செய்தால் அவரைக் கருணைக்கொலை செய்வது உலகின் சில நாடுகளில் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில்? இதுவரை இல்லை என்றபோதிலும் விக்டோரிய மாநில நாடாளுமன்றத்தின் ஒரு அவையில் கருணைக்கொலை சட்டம் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டது. இன்னொரு அவையிலும் இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கருணைக்கொலை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலமாக விக்டோரிய மாநிலம் இருக்கும். இந்த சட்டத்தை பின்பற்றி பிற மாநிலங்களும் கருணைக்கொலை சட்டம் இயற்றலாம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? சில நேயர்களின் கருத்துக்களும் மருத்துவர் மன்மோகன் அவர்களின் கருத்துக்களும். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.



Share