நாடளாவிய அளவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அலை அலையாக அதிகரிப்பது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் அவதானிக்கப்படுகிறது. தற்போது நடைபெறும் மூன்றாவது கோவிட் அலை, திரிபடைந்த கோவிட் வைரஸ் - டெல்டா வகையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட ஆரம்பத்திலிருந்து தினசரி தொற்று கண்டவர்களது எண்ணிக்கையையும், மொத்தமாக நாடு முழுவதும் தொற்றாளர்கள் எண்ணிக்கையையும் கீழுள்ள வரைபடம் காட்டுகிறது.
மருத்துவ சுகாதார சேவைகள் சீராக வழங்கப்படும் நிலையில், 70 முதல் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது என்றும் மக்கள் இயல்பாக நடக்கலாம் என்றும், Doherty Institute கூறியுள்ளது. ஆனால், தற்போது நாட்டில் எத்தனை வீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்று பார்த்தால், அந்த இலக்கை எட்டுவதற்குப் பல மாதங்கள் எடுக்கலாம் என்று தோன்றும்.
ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி போட முன் வராமல் இருந்ததும், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவியதும், தடுப்பூசி போடும் வீதத்தை வெகுவாகப் பாதித்தது. ஆனால், சமீபத்திய காலத்தில் அந்தப் போக்கு மாறியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தடுப்பூசி போடும் வீதம் இதே வேகத்தில் தொடர்ந்தால், அரசு விரும்பும் 70 முதல் 80 சத வீத எண்ணிக்கையை நாம் விரைவில் அடைய முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த எண்ணிக்கை எப்போது வரலாம்?

Daily Confirmed Cases Source: SBS Tamil

Percent of 16+ population fully vaccinated Source: SBS Tamil

Total Number of Vaccinations by State Source: SBS Tamil

Vaccination rate per 100k Source: SBS Tamil

When will we get there? Source: SBS Tamil
இந்தக் கட்டுரை எழுத, மற்றும் தளங்களில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி பதியப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.