Key Points
- XBB.1.5 மிகவும் வேகமாக பரவக்கூடிய துணைவகை கண்டறியப்பட்டது: WHO
- தற்போதைய தடுப்பூசிகள் XBB.1.5 துணைவகைக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன
- சமீபத்திய பயண ஆலோசனைக்கு, SmartTraveller பக்கத்தை பார்க்கவும்
கோவிட் தொற்றுநோயின் நான்காவது ஆண்டில் நாம் நுழையும்போது, உலகின் பெரும்பகுதி மற்ற சுவாச வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதை போலவே கோவிட் தொற்று நோய்க்கும் சிகிச்சை வழங்கும் முறைக்கு மாற தொடங்கியுள்ளது.
இருப்பினும், சீனாவில் சமீபத்திய கோவிட் தொற்று அதிகரிப்பு மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் புதிய Omicron துணை வகை XBB.1.5-இன் தோற்றம் மற்றும் பரவல், கோவிட் பேரிடர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு என்ன அச்சுறுத்தல்?
Omicron இன் புதிய துணை வகை, XBB.1.5, இதுவரை 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக WHO உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது இரண்டு BA.2 துணை வகைகளின் மறுசீரமைப்பு என்றும் XBB.1.5 அதிக அளவில் பரவக்கூடியது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், ஏறத்தாழ 70 சதவீத புதிய கோவிட் தொற்றுகள் XBB.1.5 துணை வகை எனத் தெரிவிக்கப்படுகிறது. UK-இல் சுமார் 25 XBB.1.5 தொற்றுகள் பதிவாகிவுள்ளன. இதுவரை, ஆஸ்திரேலியாவில் இதுவரை எட்டு XBB.1.5 துணை வகை தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
"நாம் என்ன செய்தாலும் XBB.1.5 ஆஸ்திரேலியாவைத் தாக்கும்," என்கிறார் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் Adrian Esterman.
"XBB.1.5 ஆஸ்திரேலியாவில் மற்றொரு அலையை ஏற்படுத்தும்," என்று பேராசிரியர் Adrian Esterman SBS கூறினார்.
ஆனால் நாட்டில் பெரும்பாலானவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளதினால் இப்புதிய கோவிட் அலையின் தாக்கம் தற்போதைய துணை வகைகளால் ஏற்பட்டதை விட மோசமானதாக இருக்க வாய்ப்பில்லை" என்றும் பேராசிரியர் Adrian Esterman தெரிவித்தார்.
XBB.1.5 வகை கோவிட் இறப்பு உட்பட கடுமையான நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தற்போது எந்தத் தகவலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
"உள்ளூர் மற்றும் உலகளாவிய கோவிட் தொற்று பரவல் நிலைமையை ஆஸ்திரேலிய தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் இந்த நிலையில், கூடுதல் எல்லை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை," என்று சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை SBS-இக்கு தெரிவித்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள BF.7 பரவல் ஏற்படுத்தவுள்ள தாக்கம் என்ன?
சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய இடங்களிலிருந்து வரும் பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் போது தமக்கு கோவிட் இல்லையென்பதை நிரூபிக்கும் எதிர்மறையான முடிவுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்கள் புறப்படும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் PCR, LAMP மற்றும் TMA ஆகியவற்றை உள்ளடக்கிய Nucleic Acid Amplification Technology (NAA) சோதனை முடிவைக் காட்ட வேண்டும். அல்லது எதிர்மறை Rapid Antigen சோதனையை (RAT) மேற்கொண்டிருக்க வேண்டும்.
RAT ஐப் பயன்படுத்தினால், அது ஒரு மருத்துவரால் மேற்பார்வை செய்யப்பட்டு அவர் ஒரு சான்றிதழை வழங்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவிற்கு BF.7-இன் அச்சுறுத்தல் மிகக் குறைவு என்றாலும் சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான பயணத்திற்கு எந்த தடையும் இல்லை என்றாலும், தற்போது சீனாவிற்கு பயணிப்பவர்கள் "அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்று வெளியுறவு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Victoria
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.