தொழில்துறை அனுபவம், வங்கியில் உள்ள பணத்தொகை வரம்பு மற்றும் ஆங்கிலப்புலமை தரநிலை ஆகியவற்றின் விதிமுறைகளில் தளர்வு மாற்றங்ககள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு விசாக்களுக்கான முன்னுரிமை பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டில் 8000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களைத் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்குள் உள்வாங்க McGowan அரசு திட்டமிட்டுள்ளது.
"நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்." மேற்கு ஆஸ்திரேலியா மாநில பிரீமியர் Mark McGowan கூறினார்.
Skilled migration திட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கு குடிபெயர தகுதிபெறும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு பின்வரும் தற்காலிக விதிமுறை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- $200 விண்ணப்பக் கட்டணம் நீக்கப்படுத்தல்.
- Secured contractஐ ஆறு மாதங்களாக குறைத்தல் அல்லது பிராந்தியங்களில் தேவையை முழுவதுமாக நீக்குதல்.
- தொழில் வல்லுநர்கள் மற்றும் மேலாளர்களுக்கு, முன் பணி அனுபவத் தேவைகளுடன் ஆங்கிலம் பேசும் தரநிலைகள் தளர்த்தப்படுதல்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கியில் $20,000 வைத்துள்ளதை காட்டவேண்டியதில்லை , அதற்கு பதிலாக "போதுமான நிதி" உள்ளது என்பதற்கான ஆதாரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதோடு சுகாதாரம், கட்டுமானம், முடி திருத்துபவர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள் மற்றும் இறைச்சிக் வெட்டுபவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வேலைகள் மாநிலத்தின் முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வேலையில்லாதோர் விகிதம் இந்த மாதம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசின் இந்த விதிமுறை தளர்வு மாற்றங்களினால் பல தொழிலாளர்கள் மாநிலத்திற்கு குடிபெயர விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கு வரும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அங்கு வீடுகளின் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் அரசு கூடுதலான குடியிருப்புகளை கட்டி வருவதாக அம்மாநில பிரீமியர் McGowan தெரிவித்தார்.
————————————————————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.