ஆஸ்திரேலியா வீசா விண்ணப்ப செயல்முறையை தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறி !!

ஆஸ்திரேலியா வீசா விண்ணப்ப செயல்முறையை தனியார்மயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் புதிய சிக்கல்.

Australian Visa

Source: SBS

ஆஸ்திரேலியா வீசா விண்ணப்ப செயல்முறையை தனியார்மயப்படுத்தும் அரசின் 1 பில்லியன் டாலர் திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டத்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இச்சட்டத்திருத்தம் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வரும் பட்சத்தில் இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆகவே இம்மாற்றம் நிகழாமல் போகக்கூடிய நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வீசா பரிசீலனை செயல்முறையில் 50 கணினிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை இதனையே அதிநவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதே தவிர இதில் தனியார்மயப்படுத்துதல் என்பது ஒன்றும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Artificial Intelligence பாவிக்கப்பட்டு வீசா குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் ஆகவே இவ்வகையான திட்டம் நமக்கு உகந்தது அல்ல என எதிர்க்கட்சிகள் வாதிடுகிறது.


Share

Published

By Selvi

Share this with family and friends