விக்டோரியாவில் முடக்கநிலை நீக்கப்படுகிறது! கோவிட் கட்டுப்பாடுகள் தொடரும்!!

விக்டோரியாவில் தற்போது நடைமுறையிலுள்ள முடக்கநிலை இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் நீக்கப்பட்டு கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவருகின்றன.

Victorian Premier Daniel Andrews.

Victorian Premier Daniel Andrews. Source: AAP

விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொற்றுக்கண்ட அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப்பின்னணியில் மாநிலத்தில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை இன்று நள்ளிரவுடன் தளர்த்தப்படுவதாகவும் ஆனால் சில கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் Premier Daniel Andrews அறிவித்தார்.

இதன்படி  இன்று செவ்வாய் நள்ளிரவு 11.59 மணிமுதல் விக்டோரியாவில் வாழ்பவர்கள்

  • வீடுகளை விட்டு வெளியே செல்ல காரணம் தேவையில்லை.
  • தமது வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு உள்ளிட்ட இடங்களுக்கு மாத்திரமே பயணம் செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது
  • வீடுகளில் விருந்தினர்களுக்கு அனுமதியில்லை. இக்கட்டுப்பாடு ஆகக்குறைந்தது இன்னும் இருவாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • வெளியரங்குகளிலும் உள்ளரங்குகளிலும் பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • 4 சதுரமீட்டர்களுக்கு ஒரு நபர் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வணிகங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், உணவகங்கள், Live music venues, dance classes மீண்டும் இயங்க ஆரம்பிக்கலாம்.
  • பள்ளிகள் மீண்டும் நேரடி கற்றல் செயற்பாட்டிற்கு மாறலாம்.
  • வெளியிடங்களில் 10 பேர் வரை மட்டுமே ஒன்றுகூட முடியும்.
இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின்  பார்வையிடலாம்.
அதிக ஆபத்தான டெல்டா வைரஸ் பரவல் அதிகளவில் வீடுகளுக்கிடையில் பரவிவருவதால் மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதை தற்போதைய சூழலில் அனுமதிக்க முடியாது என Premier Daniel Andrews  தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பலர் இன்னமும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொரு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணிநேரத்தில் 24,340 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.

Highlights

  • செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:
  • ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு:  ,  .
  • கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: .

ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு  என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 27 July 2021 1:01pm
Updated 27 July 2021 1:06pm

Share this with family and friends