Latest

கோடையிலும் குளிரில் நடுங்கும் விக்டோரியா! மேற்கு ஆஸ்திரேலியாவில் அதிவெப்பமான நாள்!!

ஆஸ்திரேலியாவின் வெள்ளம் மற்றும் பிற வானிலை தொடர்பான நிகழ்வுகள் குறித்த பிந்திய தகவல்கள்

TRAVEL MOUNT HOTHAM ALPINE RESORT

Supplied image of Hotham Alpine Resort in Victoria at night. (file) Credit: STEVE CUFF/PR IMAGE

இந்த கோடையில் ஆஸ்திரேலியா முழுவதும் புதிய அதிகபட்ச மற்றும் குறைந்த வெப்பநிலைகள் பதிவு செய்யப்படுகின்றன.

விக்டோரியா தனது மிகக்குறைந்த கோடைகால வெப்பநிலையை புதன்கிழமை காலை பதிவு செய்ததாக, தனியாருக்குச் சொந்தமான Weatherzone வானிலை அவதான மையம் கூறியது.

1978 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி பதிவான முந்தைய சாதனையான -5.2°C ஐ முறியடித்து -5.4°C என்ற வெப்பநிலையை Mt Hotham பதிவு செய்தது.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கிழக்கு விக்டோரியாவின் பெரும்பகுதிகளில் டிசம்பர் முதல் பாதியானது மிகவும் குளிராக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"Cold fronts மற்றும் குறைந்த அழுத்த நிலைமைகள் இந்த வாரம் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதிக்கு குளிர்கால நிலைமைகளைத் தொடர்ந்து கொண்டு வருகின்றன" என்று ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது..

Victorian Alps, டாஸ்மேனியா மற்றும் NSW Snowy Mountainsஇல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக Weatherzon தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 அன்று, NSW இல் உள்ள Perisher Valley ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த கோடை வெப்பநிலையான - 7ºC ஐ எட்டி இந்த சாதனையைச் சமன் செய்தது.
நாட்டில் வெப்பமான நாளுக்கான புதிய சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு ஆஸ்திரேலிய கரையில் உள்ள Mandora ஞாயிற்றுக்கிழமை 48.5ºC ஐ எட்டியது.

வெள்ளம்

Wakool Junction, Boundary Bend மற்றும் Wentworth ஆகிய இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், Euston மற்றும் Mildura வில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு விக்டோரியா மற்றும் Gippslandஇன் சில பகுதிகளில் வெள்ளம் இனி எதிர்பார்க்கப்படாது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை, டாஸ்மேனியாவில் உள்ள Mauricetonனில் Jordan ஆற்றுப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெப்ப அலை

புதன்கிழமை அதிகாலை, மேற்கு ஆஸ்திரேலியா Burrup மாவட்டத்திற்கு ஒரு வெப்ப அலை எச்சரிக்கை வெளியிடப்பட்டது, மற்றும் குடியிருப்பாளர்கள் அவர்களின் bushfire survival திட்டத்தை தயார்நிலையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

வடக்கு ஆஸ்திரேலியா முழுவதும் வெப்ப அலை நிலைகள் தணிந்துள்ளன. ஆனால் சில தீவிர வெப்ப அலை எச்சரிக்கைகள் டிசம்பர் 16 வரை தொடரும்.

தீவிர வெப்ப அலை:

QLD: North Tropical Coast மற்றும்Tablelands districts

அதிதீவிர வெப்ப அலை:

QLD: Peninsula, Gulf Country மற்றும் Herbert மற்றும் Lower Burdekin Districts

Northern Territory: Tiwi, Arnhem, Carpentaria, Gregory மற்றும் Barkly Districts

ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.

பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.

நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 14 December 2022 5:07pm
Updated 14 December 2022 5:39pm
Source: SBS


Share this with family and friends