விக்டோரிய மாநில காவல்துறையில் Acting Senior Sergeant என்ற உயர் பதவி வகித்த Krystle Mitchell என்பவர், 16 வருடங்களுக்கு மேலாக காவல்துறையில் பணியாற்றியிருக்கிறார்.
முடக்கநிலை கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடும் குழுக்களில் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் YouTube வழியாக, கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் முடக்கநிலை கட்டுப்பாடுகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தன்னைப் போன்று பல காவல்துறை அதிகாரிகளுக்கும் அவற்றில் நம்பிக்கை இல்லை என்றும் அந்தக் நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த, சமூகத்தினரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் நடந்து கொள்கிறார்கள் என்றும், அதனைப் பகிரங்கமாக எடுத்துச் சொல்வதால், அந்த நேர்காணல் முடிந்ததும் தான் பதவி விலகப் போவதகவும் அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.
Krystle Mitchell கூறிய கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என்றும், காவல்துறையிந் கருத்து அல்ல என்றும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக மாநில தலைமை சுகாதார அதிகாரியின் ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்குக் காவல்துறை ஆதரவு கொடுத்து செயல் படுகிறது என்றும், கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் போது ஒரு அதிகாரியின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை என்றும், விக்டோரிய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
Krystle Mitchell தற்போது விடுப்பில் சென்றுள்ளார். அவர் வேலைக்குத் திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. இவர் நடந்து கொண்ட விதம் காவல்துறையின் நடைமுறைக்கு எதிரானதா என்று Professional Standards Command விசாரணை நடத்துகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.