நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier Dominic Perrottet மற்றும் விக்டோரிய மாநில Premier Daniel Andrews இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அனைத்து நியூ சவுத் வேல்ஸ் உள்ளூராட்சிப் பகுதிகளும் இப்போது Green Zone – தொற்று ஆபத்து இல்லாத இடங்கள் என்று விக்டோரிய மாநிலம் அறிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து விக்டோரிய மாநிலம் செல்பவர்கள் Covid-19 சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவும் தேவையில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து அனுமதியை முன் கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.
விக்டோரிய மாநிலத்திருந்து தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ளாதவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வருவதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.