நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Northern Beaches பகுதியில் ஏற்பட்ட கொரோனா பரவல் மூலம் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள பின்னணியில் ஏனைய மாநிலங்கள் சிட்னி தொடர்பிலான பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
Northern Beaches பகுதியில் தொற்றுக்கண்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை இப்பகுதியில் மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டிய துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் Premier கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சிட்னிவாசிகளுக்கான பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
விக்டோரியா
Central Coast, Blue Mountains உட்பட Greater Sydney பகுதிகளில் வாழ்பவர்கள் விக்டோரியா மாநிலத்திற்குள் நுழைவதற்கு ஞாயிறு நள்ளிரவுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டபின் குறித்த பகுதிகளிலிருந்து விக்டோரியா வருபவர்கள் 14 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர் என Premier Daniel Andrew அறிவித்தார்.
அதேநேரம் சிட்னியிலுள்ள விக்டோரியர்கள் திங்கட்கிழமை நள்ளிரவுக்குள் விக்டோரியா திரும்பவேண்டுமென அறிவுறுத்தப்பட்டதுடன், இவர்கள் தமது வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் திரும்பிவரும் விக்டோரியர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அவர்களும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: AAP
அதேநேரம் டிசம்பர் 11ம் திகதியிலிருந்து Northern Beaches பகுதியில் இருந்துவிட்டு திரும்பிவந்துள்ள விக்டோரியர்கள் கோவிட் சோதனையை மேற்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது .
குயின்ஸ்லாந்து
குயின்ஸ்லாந்து மாநிலமும் Greater Sydney-ஐச் சேர்ந்தவர்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிமுதல் தனது எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.
அதேபோன்று சிட்னியிலுள்ள குயின்ஸ்லாந்துவாசிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு முன்னதாக குயின்ஸ்லாந்து திரும்பவேண்டுமெனவும் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாநில Premier Annastacia Palaszczukஅறிவித்தார்.

Queensland Premier Annastacia Palaszczuk speaks during a press conference in Brisbane, Sunday, 20 December, 2020. Source: AAP
ACT
ACT க்குள் நுழையும் Central Coast, Blue Mountains உட்பட Greater Sydney பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Western Australia
இதேவேளை மேற்கு ஆஸ்திரேலியா இறுக்கமான பயணக்கட்டுப்பாட்டினை அறிவித்துள்ளது.
அதாவது நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து எவரேனும் மேற்கு ஆஸ்திரேலியா செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெற்ற பின்னரே பயணம் செய்யமுடியும் என அம்மாநில Premier Mark McGowan அறிவித்துள்ளார்.
The Northern Territory
Northern Territory-க்குள் நுழையும் Central Coast, Blue Mountains, Illawarra உட்பட Greater Sydney பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Tasmania
Tasmania-க்குள் நுழையும் Greater Sydney பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிட்னிக்கும் ஹோபார்ட்டுக்கும் இடையில் இடம்பெறவிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 76 ஆவது படகோட்டும் போட்டி-Sydney to Hobart yacht race இந்த வருடம் நடைபெறாது என்றும் இந்தப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்களில் முதல்தடவையாக ரத்து செய்யப்படுகிறது என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆஸ்திரேலியா
Greater Sydney பகுதிகளிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
With additional reporting by AAP.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Please check the relevant guidelines for your state or territory: , , , , , , ,