ஆஸ்திரேலிய தலைநகர் கன்பரா அமைந்துள்ள Australian Capital Territory(ACT) பிராந்தியத்தில் ஒரு வருடமாக சமூகப்பரவல் ஊடாக கோவிட் தொற்று எதுவும் பதிவாகவில்லை.
கடைசியாக கடந்த ஆண்டு ஜுலை 10ம் திகதி 20 வயதுகளிலுள்ள பெண் ஒருவருக்கு சமூகப் பரவல் ஊடாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இவர் Gungahlin பகுதியில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர் எனவும் ACT அரசு அறிவித்திருந்தது.
குறித்த பரவல் ஊடாக ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதுவே ACT பிராந்தியத்தில் கடைசியாகப் பதிவான சமூக பரவல் என குறிப்பிடப்படுகிறது.
ACT-யில் பேராசிரியர் Tracy Smart தலைமையிலான குழு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.
ACT பிராந்தியம் கோவிட் சமூகப்பரவலிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பல காரணிகள் உள்ளதாகவும், அதில் முக்கியமானது தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் ஹோட்டல்களிலிருந்து தொற்று வெளியே பரவாதவண்ணம் மிகச்சிறந்த முறையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே எனவும் பேராசிரியர் Tracy Smart தெரிவித்தார்.
கொரோனா பரவல் ஆரம்பித்த காலம்முதல் ACT பிராந்தியத்தில் மொத்தமாக 124 பேருக்கு தொற்று பதிவான அதேநேரம் மூவர் மாத்திரம் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.