வெள்ளம் பாதித்துள்ள NSW பகுதிகளுக்கு விமானம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்த பிந்திய தகவல்கள்.

NSW FLOODS

Flooded houses are seen in Forbes, Sunday, November 6, 2022. Residents in flood-affected NSW communities are slowly returning to assess the damage as waters peak in several inland towns. Source: AAP / LUCY CAMBOURN/AAPIMAGE

NSW மற்றும் விக்டோரியாவில் உள்ள பகுதிகளில் 140க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
திங்களன்று, Narran நதி அதன் உச்சத்தை அடைந்தது, இதன் விளைவாக Angledoolலில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

Brendaவில் மிதமான வெள்ளம் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், வியாழன் முதல் வெள்ளி வரை வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Weilmoringleகில் நேற்று சிறிய வெள்ளம் பதிவாகியுள்ளது, ஆனால் நவம்பர் நடுப்பகுதியில் நீர்மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Narrabriயில் உள்ள Namoi ஆற்றின் குறுக்கே வெள்ளம் தணிந்துள்ளது, ஆனால் Wee Waa தொடர்ந்து அதிக நீர் மட்டங்களை அனுபவித்து வருகிறது, மேலும் Bugilboneனில் மீண்டும் ஒரு வெள்ள உயர்வு பதிவாகியுள்ளது.

தற்போது ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ள Goangraவில் வெள்ளிக்கிழமை முதல் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

Warren Townனில், Macquarie ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு நீடித்தாலும், இந்த வாரம் முழுவதும் நீர்மட்டம் 9.50 மீட்டர் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Cottons Weir, Jemalong, Condobolin, Euabalong மற்றும் Hillston ஆகிய பகுதிகள் தொடர்ந்து பெரும் வெள்ளத்தை சந்தித்து வருகின்றன.

Hillston Weirரில் உள்ள Lachlan நதி நவம்பர் 30 இல் 3.30 மீட்டரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக ஆகஸ்ட் 1990 வெள்ளம் போன்ற நிலை ஏற்படும்.

Barwon ஆற்றின் நீடித்த வெள்ளம் Mungindi, Mogil Mogil, Walgett மற்றும் Brewarrinaவை தொடர்ந்து பாதிக்கிறது.

Darling, Macquarie, Bogan மற்றும் Culgoa நதிகளில் இருந்து வரும் பாய்ச்சல்களின் கலவையானது Bourkeயில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1998 வெள்ளம் போன்ற நிலை நவம்பர் 20 அன்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய வெள்ளம் காரணமாக Barwon-Darling ஆற்றங்கரையில் உள்ள மூன்று நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Walgett, Collarenebri மற்றும் Lightning Ridge இல் வசிப்பவர்கள் தற்போது உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனத்திற்காக விமானங்களின் ஊடான விநியோகத்தை நம்பியுள்ளனர்.

இதற்கிடையில், NSW முதல் விக்டோரியா வரை, Moama மற்றும் Echuca ஆகிய இடங்களில் Murray ஆற்றின் குறுக்கே ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் இன்று வரை பெரும் வெள்ளம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Torrumbarryஇல் நவம்பர் நடுப்பகுதி வரை அதிக நீர்மட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swan Hill, Wakool Junction, Boundary Bend, Eusto, Mildura மற்றும் Wentworth ஆகியவை 1975 வெள்ளத்தின் போது பதிவானதை விட அதிக வெள்ளத்தை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.

பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.

நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 9 November 2022 4:18pm
Updated 9 November 2022 4:32pm
By SBS
Source: SBS


Share this with family and friends