புதிய Child Care Subsidy-கொடுப்பனவைப் பெற பதிவு செய்துவிட்டீர்களா?

Childcare centre (Getty)

Childcare centre (Getty) Source: Getty

எதிர்வரும் ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளமை நாமறிந்த செய்தி.

இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy  அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதனூடாக வழங்கப்படும் நிதி நேரடியாக சிறுவர் பராமரிப்பு சேவை வழங்குநர்களைச் சென்றடையவுள்ளது.

இம்மாற்றத்தின் மூலம் சுமார் 1மில்லியன் பேர் நன்மையடைவார்கள் என அரசு கருதுகின்றது.

இந்தப்பின்னணியில் இதுவரை காலமும் சிறுவர் பராமரிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெற்றவர்கள் புதிய Child Care Subsidy-ஐப் பெறுவதற்கேற்றவகையில் தமது தரவுகளை பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யத்தவறும்பட்சத்தில் ஜுலை 2 முதல் அவர்கள் இந்த கொடுப்பனவுக்குத் தகுதிபெறமாட்டார்கள்.

இதுவரை சுமார் 7 லட்சம் குடும்பங்கள் தமது விபரங்களை புதிய முறைக்கென பதிவு செய்துகொண்டுள்ளதாகவும் இன்னமும் 4 லட்சம் குடும்பங்கள் தம்மைப் பதிவு செய்யவில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.

எனவே அவ்வாறு பதிவுசெய்யத்தவறியவர்கள் இப்பொழுதே mygov ஊடாக தமக்கென Centrelink கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் தமது ஆண்டு வருமானம் உள்ளிட்ட தகவல்களை மீள்பதிவு செய்துகொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.




Share
Published 5 June 2018 6:48pm
Updated 5 June 2018 6:58pm
Presented by Renuka


Share this with family and friends