18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மூன்றாவது சுற்று தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று TGA இன்று காலை அறிவித்தது.
தடுப்பூசி எப்படி வழங்கப்படும் என்பதன் விரிவான திட்டம், அடுத்த வாரத்திற்கு முன்னர் முடிவு செய்யப்படும் என்று பிரதமர் Scott Morrison கூறினார்.
“தடுப்பூசி திட்டம் எப்படி முதியோர் பராமரிப்பு நிலையங்களில் தொடங்கியதோ, அதே போல், மூன்றாவது சுற்றும் முதியோர் பராமரிப்பு இடங்களில் வசிப்பவர்களுடன் தொடங்குவோம்,” என்று Nine Networkற்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார்.
நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாவது சுற்று பெறுவதற்குத் தகுதியுடையவர்கள். இன்று வெளியிடப்பட்ட ஆலோசனை பொது மக்கள் அனைவரும் மூன்றாவது சுற்றுத் தடுப்பூசி பெறுவதற்கு வழி வகுக்கிறது.
இரண்டாவது சுற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பின்னர், குறைந்தது ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் மூன்றாவது சுற்று கொடுக்கப்பட வேண்டும் என்று TGA பரிந்துரைத்தது.
மூன்றாவது சுற்று தடுப்பூசி குறித்த மேலதிக ஆலோசனைகளை, நோய்த் தடுப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (The Australian Technical Advisory Group on Immunisation அல்லது சுருக்கமாக ATAGI), விரைவில் அரசுக்கு வழங்கும்.
மூன்றாவது சுற்று தடுப்பூசி சிறப்பாக செயல்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முன்னணி தொற்று நோயியல் நிபுணர் Mary-Louise McLaws கூறினார்.
“உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மூன்றாவது சுற்று தடுப்பூசி உண்மையில் அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, தடுப்பூசியின் செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது என்பதற்கு இப்போது அருமையான சான்றுகள் உள்ளன,” என்று அவர் Nine Network நேர்காணலில் கூறினார்.
இதனால் பலரும் பயன் பெறுவார்கள்
என்றார் அவர்.
.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.