சிட்னியில் காணாமல்போன இந்திய இளைஞன் சடலமாக மீட்பு!

சிட்னியில் கடந்த நான்கு நாட்களாக காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Rahul Singh

Source: NSW SES Camden Unit & Facebook

ராகுல் சிங் என்ற இந்தியப் பின்னணிகொண்ட 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி காலை 6 மணியளவில் Alchornea Crescent, Mount Annan-இல் அவதானிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து அவரைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது

அன்றையதினம் காலை 7 மணியளவில் ராகுல் சிங், Mount Annan தாவரவியல் பூங்காவிற்குள் சென்றுகொண்டிருப்பது cctv கமராவில் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தீவிரதேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து, நேற்று மதியம் 1.40 மணியளவில் குறித்த இளைஞனின் சடலம் Mount Annan தாவரவியல் பூங்காவிலுள்ள நீரணையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த இளைஞர் bipolar disorder எனும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகியிருந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.


If you need help call Lifeline: 13 11 14 or lifeline.org.au
Beyond Blue: 1300 22 4636 or beyondblue.org.au
Beyond Blue's coronavirus support service: 1800 512 348 or coronavirus.beyondblue.org.au
Kids Helpline: 1800 55 1800 or kidshelpline.com.au
Headspace: 1800 650 890 or headspace.org.au

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Published 22 July 2022 11:33am
Updated 22 July 2022 12:00pm

Share this with family and friends