சீனா, ஹாங்காங் & Macauலிருந்து வரும் பயணிகளுக்கான கோவிட் கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

Australia asks mandatory Covid-19 test from Chinese travelers

SYDNEY, AUSTRALIA - JANUARY 5: International travelers arrive at Sydney Airport in Sydney, Australia on January 5, 2023. Source: Anadolu / Anadolu Agency via Getty Images

Key Points
  • சீனா, ஹாங்காங் மற்றும் Macauஇலிருந்து வரும் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்குமுன் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளவேண்டும்.
  • Omicron இன் புதிய துணைத்திரிபான XBB.1.5 வட அரைக்கோளத்தில் அதிகரித்துள்ளது.
  • XBB.1.5 என்பது இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகவும் பரவக்கூடிய துணை திரிபாகும்(WHO)
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் இந்த வாரம் புதிய கோவிட் தொற்றுகளில் கணிசமான வீழ்ச்சி காணப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸில் 19,793 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் 27,665 தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் விக்டோரியாவில் கடந்த வாரத்தில் 16,568 தொற்றுகள் பதிவாகியிருந்தநிலையில் இவ்வாரம் 12,349 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும் இரு மாநிலங்களிலும் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முந்தைய வாரம் 32 பேர் மரணமடைந்தநிலையில், இந்த வாரம் இது 77 ஆக அதிகரித்துள்ளது. விக்டோரியாவில் முந்தைய வாரம் 69 பேர் மரணமடைந்தனர். இந்த வாரம் 108 பேர் மரணமடைந்தனர்.
சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய இடங்களிலிருந்து வரும் பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் போது தமக்கு கோவிட் இல்லையென்பதை நிரூபிக்கும் எதிர்மறையான முடிவுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்கள் புறப்படும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் PCR, LAMP மற்றும் TMA ஆகியவற்றை உள்ளடக்கிய Nucleic Acid Amplification Technology (NAA) சோதனை முடிவைக் காட்ட வேண்டும். அல்லது எதிர்மறை Rapid Antigen சோதனையை (RAT) மேற்கொண்டிருக்க வேண்டும்.

RAT ஐப் பயன்படுத்தினால், அது ஒரு மருத்துவரால் மேற்பார்வை செய்யப்பட்டு அவர் ஒரு சான்றிதழை வழங்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly, “போதுமான பொது நியாயம்” இல்லாததாலும், வைரஸுடன் வாழ்வதற்கான நாட்டின் அணுகுமுறைக்கு முரணானதாலும், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று Albanese அரசிடம் அறிவுறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், சீனாவின் கோவிட் நிலைமை குறித்த விரிவான தகவல்கள் இல்லாதமை சுட்டிக்காட்டப்பட்டு கட்டுப்பாடுகள் "அதிகமான எச்சரிக்கையுடன்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளின் நடவடிக்கைகள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சாத்தியமான பதில் நடவடிக்கைகள் குறித்தும் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, சீனா CDCயின் விஞ்ஞானிகளை சந்தித்து அந்நாட்டின் நிலைமையைப் பற்றி விவாதித்ததுடன் கூடுதல் பகுப்பாய்வு மற்றும் தரவைப் பகிர்வதற்கான முக்கியமான தேவையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
WHO இன் கூற்றுப்படி, Omicron இன் புதிய துணை வகை, XBB.1.5 இதுவரை 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் தொற்றுகள் அதிகரித்துள்ளன.

இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய துணை திரிபு இதுவென WHO இன் தொற்றுநோயியல் நிபுணர் Maria Van Kerkhove குறிப்பிட்டுள்ளார்.

WHO இன் சமீபத்திய கோவிட் தரவுகளின்படி, உலகம் முழுவதும் வாராந்திர தொற்றுகள் மற்றும் இறப்புகள் முறையே 22% மற்றும் 12% குறைந்துள்ளது.

சோதனைகளின் எண்ணிக்கைகளில் காணப்படும் வீழ்ச்சி மற்றும் தாமதம் ஆகிய இரண்டின் காரணமாக, இந்தத் தரவு "முழுமையற்றது" என்று WHO கூறுகிறது.

உலகளவில், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வாராந்திர தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
நீங்கள் வெளிநாடு செல்வதற்கு முன், பார்க்கவும்

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 6 January 2023 2:45pm
Updated 6 January 2023 3:18pm
By Yumi Oba
Source: SBS


Share this with family and friends