ஆஸ்திரேலியாவில் குடியேறுவதை மேலும் கடுமையாக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் குடியேற அனுமதிப்பதில் (Skilled Migration) புள்ளிகளை அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர்த்தியுள்ளது.
ஆனால் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியிலும் ஒருவருக்கு புலமை இருந்தால் அவருக்கு 5 புள்ளிகள் கிடைக்கும் எனும் செய்தி சிலருக்கு குடியேறும் விண்ணப்பம் ஏற்கப்படுவதை எளிதாக்கும் என்று குடிவரவுத்துறை தொடர்பான முகவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அது எப்படி என்பதைப் பார்ப்போம்:
General Skilled Migration என்ற அடிப்படையில் ஒருவர் நாட்டில் குடியேற இதுவரை 60 புள்ளிகள் போதும் என்றிருந்ததை அரசு 65 புள்ளிகளாக கூட்டியுள்ளது.

NAATI's CCL Exam determines an applicant’s ability to interpret the conversation between two speakers speaking different languages. Source: Pixabay
சாதரணமாக ஒருவர் 65 புள்ளிகளை எட்டுவது எளிதல்ல என்று பாரக்கப்படுகிறது. ஆனால் ஒருவருக்கு ஆங்கில மொழியைத் தவிர இன்னொரு மொழி தெரியுமென்றால் அவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்ற பழைய நடைமுறையை அரசு மாற்றியமைக்கவில்லை.
எனவே 65 புள்ளிகளை எட்ட முடியாமல் திணறும் விண்ணப்பதாரர்கள் இனி இந்த மொழிப் புலமைக்கு வழங்கப்படும் 5 புள்ளிகளை அதிகம் நம்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக ஒருவருக்கு தமிழ் மொழியில் எழுதவும், பேசவும், வாசிக்கவும் தெரியுமென்றால், அவர் National Accreditation Authority for Translators and Interpreters (NAATI) எனும் அமைப்பு நடத்தும் Credentialed Community Language (CCL) தேர்வில் வெற்றிபெற்று 5 புள்ளிகளைப் பெறலாம்.
இந்த தேர்வில் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல என்று சிலர் கூறினாலும், இந்த வெற்றி விகிதம் 50% என்று கூறப்படுகிறது.
Credentialed Community Language (CCL) தேர்வு நடைபெறும் நகரங்கள்: Adelaide, Brisbane, Canberra, Hobart, Melbourne, Perth & Sydney.
Credentialed Community Language (CCL) தேர்வு நடைபெறும் நாட்கள்: 13-17 August 2018, 22-26 October 2018 & 3-7 December 2018.