நாட்டிற்கு வருவதற்கு, பெற்றோரும் மிக நெருங்கிய உறவினர் என கணிக்கப்படுவர்

இந்நாட்டுக் குடிமக்கள் மற்றும் இங்கு நிரந்தரமாக வசிப்பதற்குக் குடியுரிமை பெற்றவர்கள் நாடு திரும்புவதற்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஒரு மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் வாழ்பவர்களில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதே அந்த இலக்கு. அந்த இலக்கை NSW மாநிலம் அடைந்து விட்டது. நாடு திரும்புபவர்களுடன், மிக நெருங்கிய உறவினர் மட்டுமே இந்நாட்டிற்கு வர முடியும். அந்தப் பட்டியலில் முன்னர் பெற்றோர் இடம் பெறவில்லை.

Prime Minister Scott Morrison addresses media during a press conference at Kirribilli House in Sydney

Prime Minister Scott Morrison addresses media during a press conference at Kirribilli House in Sydney Source: AAP

நாட்டிற்கு வருவதற்கு,
பெற்றோரும் மிக நெருங்கிய உறவினர்
என கணிக்கப்படுவர் என்ற அறிவிப்பை, பிரதமர் Scott Morrison கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

நம் நாட்டிலுள்ள பலருக்கு இது நல்ல செய்தி என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

“நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு, இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  அவர்கள் தங்கள் குடும்பத்தினர், வெளிநாடுகளில் இருக்கும் அவர்களின் பெற்றோருடன் விரைவில் மீண்டும் ஒன்றிணையலாம் என்ற நம்பிக்கையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்ல செய்தி,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னர் அறிவிக்கப்பட்ட Covid-19 பயண விதிகளின் கீழ், பெற்றோர் மிக நெருங்கிய உறவினராக அங்கீகரிக்கப்படவில்லை.  அந்த சூழ்நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளித்து அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.
TGA அங்கீகரித்த தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட பெற்றோர் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிட்னிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.  அவர்கள் விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை.


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 17 October 2021 10:38am
Updated 12 August 2022 3:00pm
By Rashida Yosufzai, Kulasegaram Sanchayan
Source: SBS News


Share this with family and friends