இந்தியர்கள் ஆஸ்திரேலியா வர விசா நடைமுறை எளிதாகிறது

An australian visa

Source: iStockphoto

எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் இந்தியக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் Online-இணையமூடாக ஆஸ்திரேலிய Visitor விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் 4 மாதங்களில் மட்டும் 65,000 இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கான Visitor Visa வழங்கப்பட்டிருப்பதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் இந்நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக துணை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.

இதன்படி ImmiAccount மூலம் இணையமூடாக எந்தநேரமும் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியும் என்பதுடன், இணையமூடாக கொடுப்பனவை மேற்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் விசா விண்ணப்பத்தின் பரிசீலனை எந்தக்கட்டத்தில் இருக்கிறது என்பதையும், இணையமூடாகவே அறிந்துகொள்ளலாம்.

இப்புதிய நடைமுறையானது ஆஸ்திரேலியா வரும் இந்தியர்களுக்கு பாரிய நன்மையளிக்கும் எனத் தாம் நம்புவதாக, துணை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.

இச்செய்தி குறித்த மேலதிக விபரங்களுக்கு 02 6277 4430 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.



 

Share

Published

Updated

Presented by Renuka.T


Share this with family and friends