NYE கொண்டாட்டங்கள்: ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ளன?

இம்முறை ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Fireworks explode above the Sydney Harbour Bridge during New Year's Eve celebrations in Sydney, Wednesday, 1 January, 2020.

Fireworks explode above the Sydney Harbour Bridge during New Year's Eve celebrations in Sydney, Wednesday, 1 January, 2020. Source: AAP

2021 ஆம் ஆண்டை வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் வரவேற்க விரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் சாதகமாக அமையவில்லை.

குறிப்பாக நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள பரவல் ஆஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களிலும் இலேசாக எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள பின்னணியில் இம்முறை ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் NSW-இல் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் அருகிலுள்ள கிளினிக்கில் பரிசோதனை செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புத்தாண்டு பிறக்கவுள்ள இவ்வேளையில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன எனப் பார்ப்போம்.

New South Wales

Sydney Harbour-இல் 9மணிக்கு குடும்பங்களுக்கான வாணவேடிக்கை இடம்பெறாது. ஆனால் நள்ளிரவுமாத்திரம் சிறியளவிலான வாணவேடிக்கை நிகழ்வு இடம்பெறும். ஆனால் அனுமதி பெற்றவர்கள் மாத்திரமேஇப்பகுதிக்குச் செல்லமுடியும் என்பதால் மக்கள் வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சியில் இவ்வாணவேடிக்கையை கண்டுகளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wollongong, Central Coast, Blue Mountains உள்ளிட்ட Greater Sydney பகுதியில் வாழ்பவர்கள் தமது வீடுகளில் 5 பேர் வரை(சிறுவர்கள் உட்பட) ஒன்றுகூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிடங்களில் 30 பேர் மாத்திரமே ஒன்றுகூட முடியும்.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளியாக Northern Beaches காணப்படுவதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

Northern Beaches இன் வடக்கு வலயத்தில் வாழ்பவர்கள் ஆகக்குறைந்தது ஜனவரி 9ம் திகதி வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். எனினும் ஆண்டு இறுதி நாளான இன்று மாத்திரம் அப்பகுதியில் வாழ்பவர்கள் தமது வீடுகளில் 5 பேர் வரை(சிறுவர்கள் உட்பட) ஒன்றுகூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Northern Beaches இன் தெற்கு வலயத்தில் வாழ்பவர்கள் தமது வீடுகளில் 5 பேர் வரை(சிறுவர்கள் உட்பட) ஒன்றுகூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பரவல் குறித்த மேலதிக விபரங்களை  இல் பார்வையிடலாம்.

Victoria

விக்டோரியாவில் வாழ்பவர்கள் இன்று(31/12/2020) பிற்பகல் 5 மணிமுதல் வீடுகளைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசங்களை தம்மோடு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுடன் indoors- உள்ளரங்குகளில் இருக்கும்போது முகக்கவசத்தை அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்டோரியர்கள் தமது வீடுகளில் அதிகபட்சம் 15 விருந்தினர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும்.

மெல்பேர்னில் Yarra River-க்கு மேலாக நடைபெறும் புதுவருட வாணவேடிக்கை இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் புதுவருட கொண்டாட்டத்திற்கென மெல்பேர்ன் நகரத்துக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் நகரத்திலுள்ள குறிப்பிட்ட இடங்களில் முன் அனுமதி பெற்றவர்களே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Queensland

பிரிஸ்பேர்னில் வழக்கமாக நடைபெறும் புதுவருட வாணவேடிக்கை நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் 50 பேர்வரை(வீட்டில் வசிப்பவர்கள் உட்பட)ஒன்றுகூட முடியும். வெளியிடங்களில் 100 பேர் வரை ஒன்றுகூட அனுமதியுண்டு.

South Australia

அடிலெய்டில் பிரதானமாக இடம்பெறும் புதுவருட வாணவேடிக்கை நிகழ்வுகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

ஆனால் Murray Bridge, Whyalla, Victor Harbour, Port Lincoln ஆகிய Local Councils-இல் வாணவேடிக்கை நிழ்வுகள் சிறியளவில் இடம்பெறவுள்ளன.

Western Australia

மேற்கு ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் வாணவேடிக்கைகள் இடம்பெறுகின்றன. மேலதிக விபரங்களுக்கு 

Tasmania

டஸ்மேனியாவில்  River Derwent-இல் இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு புதுவருட வாணவேடிக்கை நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.

Northern Territory

உள்ளரங்கு மற்றும் வெளியரங்குகளில் ஒன்றுகூடுவதற்கு எண்ணிக்கை வரம்பு கிடையாது. ஆனால் சமூகஇடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்

ACT

பிரதானமாக இடம்பெறும் புதுவருட வாணவேடிக்கை நிகழ்வுகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன

ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விபரங்களைப்பெற :  


Share
Published 31 December 2020 1:38pm
Updated 31 December 2020 3:43pm
By Jarni Blakkarly


Share this with family and friends