Highlights:
- ஆஸ்திரேலியாவில், 2022ம் ஆண்டு , எதிர்பார்த்ததை விட 20,000 இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன
- புதிய bivalent தடுப்பூசிகள் single-strain தடுப்பூசிகளை விட 1.6 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக ஆராய்ச்சி காட்டுகிறது
- ஏப்ரலில் இருந்து வருடாந்திர influenza தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கவேண்டியுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாகக் NSW Health கூறியுள்ளது.
இந்த அதிகரிப்புகள் "ஒரு புதிய அலையின் தொடக்கத்தைக் குறிக்கலாம்" என்று NSW Health சுட்டிக்காட்டியுள்ளது.
"மிகவும் கலவையான திரிபுகள் இன்னமும் சமூகத்தில் உள்ளதாகவும், CH.1.1 மற்றும் XBB துணைத்திரிபுகளில், குறிப்பாக XBB.1.5இல் தொடர்ந்து அதிகரிப்பைக் காண்பதாகவும், NSW Health வியாழன் அன்று தனது சமீபத்திய வாராந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த துணைத்திரிபுகள் நோயெதிர்ப்பிலிருந்து தப்பிக்கக்கூடியதன்மை கொண்டவை என கூறப்படுகிறது.
NSW மாநிலத்தில், வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. கடந்த வாரம் பதிவான 7,163 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாரம் 7,871 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
விக்டோரியாவில் இந்த வாரம் 3,319 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 3,016 ஆக இருந்தது.
நாட்டில் கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட கிட்டத்தட்ட 20,000 இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக் காரணமாகவே இவ்வதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Silicon, தங்கம் மற்றும் copper போன்றவை, கொரோனா வைரஸின் spike proteinஐ அழிக்கக்கூடும் என Curtin பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி காட்டுகிறது.
இவற்றை air filters, benches, மேசைகள்,சுவர்கள், துடைக்கும் துணிகள் மற்றும் முகக்கவசங்களில் பயன்படுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ்களை அழிக்கலாம் என, முன்னணி ஆராய்ச்சியாளர் Dr Nadim Darwish கூறினார்.
"இந்த வழிகளில் கொரோனா வைரஸை அழிப்பதன் மூலம், அவை அதிகமான மக்களைச் சென்றடைவதையும், பாதிப்பதையும் தடுக்கலாம்" என்று Dr Darwish கூறினார்.
குறிப்பிட்ட கோவிட் திரிபுகளுக்கெதிராக பாதுகாப்பு வழங்கும்வகையில் உருவாக்கப்பட்ட புதிய bivalent தடுப்பூசிகள், original single-strain தடுப்பூசிகளைக் காட்டிலும், கோவிட்-19க்கு எதிராக 1.6 மடங்கு சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதாக, UNSWவின் Kirby institute நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Influenza பருவத்தின் உச்சக்கட்டத்திற்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பாதுகாப்பை வழங்கும்வகையில், influenza தடுப்பூசி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்திலிருந்து போடப்பட வேண்டும் என, சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி கையிருப்பு கிடைத்தவுடன் அதனை வழங்கும் பணி தொடங்கப்படும் எனவும், influenza தடுப்பூசிகள் எந்த கோவிட்-19 தடுப்பூசியுடனும் இணைந்து கொடுக்கப்படலாம் எனவும் (அதே நாளில் கொடுக்கப்படலாம்) அது கூறியது.
இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 28 நாட்களில் உலகளாவிய கோவிட் தொற்றுகள் 58 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இறப்புகளில் 65 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிக அளவில் கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Weekly global cases. Source: WHO Credit: Sahil Makkar
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.