நியூ சவுத் வேல்ஸில் கடுமையான வானிலை காணப்படும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பின்வரும் பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன:
- Sussex Inlet
- Kempsey
- St Georges Basin
- Camden
- Croki
- Picnic Point
- Pleasure Point
- Sandy Point
- Warwick Farm
- Moorebank
- Milperra
- Lansvale
- Holsworthy
- Georges Hall
- Chipping
- East Hills
Manly அணை நிரம்பிவழியத் தொடங்கியுள்ளதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம். பிந்திய தகவல்களுக்கு -ஐப் பார்க்கவும்.
Freshwater Surf Life Saving Club வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மாநில அவசர சேவை வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்:
- செல்லப்பிராணிகள், அத்தியாவசிய பொருட்கள், குளிர்தாங்கும் உடைகள், மருந்துகள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
- மற்ற தனிப்பட்ட உடைமைகளை பாதுகாப்பான/உயர்ந்த இடத்திற்கு மாற்றவும்.
- நெரிசலான சாலைகளைத் தவிர்க்கும்வகையில் விரைவாகப் புறப்படுங்கள்.
- நீண்டநேரம் பயணம் செய்யவேண்டியிருப்பதால் குடிநீர் மற்றும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
- இந்தத் தகவலை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளவும். முடிந்தால் மற்றவர்களுக்கு உதவவும்.
வெளியேற்ற உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட சிட்னி புறநகர் பகுதிகளின் விவரங்களடங்கிய புதுப்பிக்கப்பட்ட வரைபடம் கிடைக்கிறது
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணில் அழைக்கவும்.