NSW கிழக்கு கரையில் தெளிவான வானிலை! வெள்ள அபாயம் தொடர்கிறது!!

The Windsor Bridge is no longer visible after being submerged by floodwater from the Hawkesbury River on March 9, 2022

The Windsor Bridge is no longer visible after being submerged by floodwater from the Hawkesbury River on March 9, 2022. Source: AAP Image/Bianca De Marchi

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் இன்றையதினம் வானிலை சற்று மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் Hawkesbury, Upper Nepean மற்றும் Colo ஆறுகளைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளம் இன்னும் தொடர்கிறது.

North Richmond, Windsor, Sackville, Lower Portland மற்றும் Wisemans Ferry  ஆகிய இடங்களில் Hawkesbury ஆற்றின் குறுக்கே பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Hawkesbury  ஆற்றின் நீர்மட்டம் இன்று சில பகுதிகளில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nepean ஆறு  Penrith-ல் சிறிதளவு வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

Putty வீதியில் உள்ள Colo ஆற்றிலும் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

பெருந்தெருக்கள் அமைச்சர் Natalie Ward தெரிவித்துள்ளதன்படி மாநிலம் முழுவதும் பல வீதிகள் சேதமடைந்துள்ளன.

வெளியேற்ற உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட சிட்னி புறநகர் பகுதிகளின் விவரங்களடங்கிய புதுப்பிக்கப்பட்ட வரைபடம்  கிடைக்கிறது

சாலைகள் மூடப்பட்டிருந்தால் அவை தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்: 

 பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணில் அழைக்கவும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறியவர்கள் தமது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது வேறு தங்குமிடங்களில் தங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது முடியாவிட்டால்,   இதற்கென உருவாக்கப்பட்டுள்ளன.


நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மாநில அவசர சேவை வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்:

  • செல்லப்பிராணிகள், அத்தியாவசிய பொருட்கள், குளிர்தாங்கும்  உடைகள், மருந்துகள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  • மற்ற தனிப்பட்ட உடைமைகளை பாதுகாப்பான/உயர்ந்த இடத்திற்கு மாற்றவும்.
  • நெரிசலான சாலைகளைத் தவிர்க்கும்வகையில் விரைவாகப் புறப்படுங்கள்.
  • நீண்டநேரம் பயணம் செய்யவேண்டியிருப்பதால் குடிநீர் மற்றும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இந்தத் தகவலை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளவும். முடிந்தால் மற்றவர்களுக்கு உதவவும்.

Floodwaters instructions in English
Source: NSW Multicultural Health Communication Service
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 10 March 2022 2:50pm


Share this with family and friends