NSW மாநிலத்தில் நீங்கள் வாழும் இடத்தில் COVID-19 கட்டுப்பாடுகள் எப்படி தளர்த்தப்படுகின்றன?

தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு விதித்துள்ள COVID-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுகின்றன. மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 70 மற்றும் 80 சதவீத இலக்குகளை எட்டும் போது கிடைக்கவிருக்கும் ‘சுதந்திரத்தின்’ முதற் படியாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

COVID-19 easing of restrictions

Source: AAP

Blue Mountains மற்றும் Wollongong உள்ளூராட்சிப் பகுதிகள் உட்பட, சிட்னி பெரு நகரில் வசிப்பவர்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கட்டளை தற்போது நடைமுறையிலுள்ளது.  ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

COVID-19 டெல்டா வகை வைரஸ் 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் அதிகமாகப் பரவியுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அடையாளம் கண்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி, திங்கட்கிழமை முதல்:

களுக்கு வெளியே வாழும் ஒருவர், தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால், (குழந்தைகள் உட்பட) ஐந்து பேர் அவரது உள்ளூராட்சிப் பகுதிக்குள் அல்லது ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வெளி இடங்களில் சந்திக்க அனுமதிக்கப்படும்.

களில் வாழ்பவர்கள் தடுப்பூசி முழுமையாகப் போட்டிருந்தால், பொழுது போக்கிற்காக வெளி இடங்களில் – ஆனால் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள், மற்றும் ஊரடங்கு நேரம் தவிர்த்து அதிக பட்சம் ஒரு மணி நேரம் என்ற சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு – கூட முடியும்.
LGAs of concern in Greater Sydney COVID-19
There are 12 Local Government Areas (LGAs) of concern in Greater Sydney including some suburbs in Penrith. Source: SBS
உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வைத்திருக்க வேண்டும்.

NSW மாநிலத்தின் பிராந்திய இடங்கள்

சமூகப் பரவல் மூலம், குறைந்தது 14 நாட்களுக்கு யாருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்படாத , செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  இருந்தாலும்:

  • ஒரு வீட்டில் (12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட) ஐந்து பேர் மட்டுமே விருந்தாளிகளாக அனுமதிக்கப்படுவார்கள்.
  • வெளிப்புற இடங்களில் 20 பேர் வரை கூடலாம்.
  • உணவுக் கூடங்கள் மற்றும் விருந்தோம்பல் செய்யும் இடங்கள், சில்லறை வியாபாரக் கடைகள் மற்றும் உடற் பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட பல இடங்கள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்கப்படலாம்.

சிட்னி பெரு நகர வரைபடம்

Map showing Metropolitan Sydney
Map showing Metropolitan Sydney Source: NSW Government
70 மற்றும் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர்

மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தடுப்பூசியின் இரண்டு சுற்றுகளையும் பெற்றவர்களுக்கு, கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிமுகமாகலாம்.

தடுப்பூசியின் இரண்டு சுற்றையும் 70 சத வீதமானவர்கள் பெற்று விட்ட பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் “வீட்டிலே தங்கியிருங்கள்” என்ற கட்டுப்பாடு நீக்கப்படும் என்று மாநில அரசு கூறுகிறது.

முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டவர்கள் மட்டுமே, .

தடுப்பூசியின் இரண்டு சுற்றையும் 80 சத வீதமானவர்கள் பெற்று விட்ட பின்னர், தொழில்துறை, சமூகம் மற்றும் பொருளாதாரம் மீதான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்.  இதன் முழுமையான விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சிட்னி பெரு நகர், Central Coast, Shellharbour, Blue Mountains, Wollongong வரைபடம்

Greater Sydney, Central Coast, Shellharbour, Blue Mountains and Wollongong
Greater Sydney, Central Coast, Shellharbour, Blue Mountains and Wollongong, showing where restrictions applied. Source: NSW Government
என்ற இணையத்தளத்தில், 60ற்கும் மேற்பட்ட மொழிகளில் கொரோனா வைரஸ் குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 15 September 2021 1:25am
By Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends