Key Points
- ஆஸ்திரேலியாவின் $5 நோட்டில் இருந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படம் அகற்றப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- இது பூர்வீகக் குடிமக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றை மதிக்கும் வடிவமைப்பாக மாற்றப்படும்.
- அரசுடன் கலந்தாலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் $5 நோட்டு புதுப்பிக்கப்பட உள்ளது. அதில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் படத்துக்குப் பதிலாகப் பூர்வீகக் குடிமக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றைப் பறைசாற்றும் வடிவமைப்புகள் இடம்பெறவுள்ளன.
இந்த $5 நோட்டின் மறுபக்கத்திலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் தொடர்ந்தும் காணப்படும்.
ஆஸ்திரேலிய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அரசின் ஆதரவுடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து புதிய $5 நோட்டு வடிவமைக்கப்படும் என்று RBA தெரிவித்துள்ளது.
இதனை வடிவமைத்து அச்சிட சில ஆண்டுகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய $5 நோட்டு தொடர்ந்தும் பயன்பாட்டில் இருக்கும் என்றும் புதிய நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் அதனைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————————————————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்